- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த நடிகர்கள் எல்லாம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா? அந்த படங்களில் ஒலித்தது இவர்களது குரல்களா? - இது...

இந்த நடிகர்கள் எல்லாம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா? அந்த படங்களில் ஒலித்தது இவர்களது குரல்களா? – இது வேற லெவல் தரமான சம்பவமா இருக்கே?

- Advertisement -

வேறு மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிகைகள் தமிழ் படங்களில் நடிக்கும் போது தமிழில் அவர்களுக்கு டப்பிங் பேசுவது பின்னணி குரல் கலைஞர்கள் தான். அதே போல் வேறு மொழி படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படும் போது டப்பிங் கலைஞர்கள் அந்தந்த நடிகர்களின் குரலில் பேசுகின்றனர். அந்த வகையில் தமிழில் பலர் டப்பிங் கலைஞர்களாக ஆரம்பத்தில் இருந்துள்ளனர்.

அந்த லிஸ்ட்டில் முதலில் வருவது நடிகர் சியான் விக்ரம்தான். அவர் ஆரம்பத்தில் அப்பாஸ் அஜீத்குமார் பிரபுதேவா வினீத் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் போன்ற பல நடிகர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். ராசய்யா காதலன் மின்சார கனவு போன்ற படங்களில் பிரபுதேவா குரலில் ஒலிப்பது நடிகர் விக்ரம் குரல்தான்.

- Advertisement -

அதே போல் நடிகை ராதிகா சரத்குமார் முதல் மரியாதை படத்தில் ராதாவுக்கு பின்னணி குரல் பேசியிருந்தார். அதே போல் கடலோர கவிதைகள் படத்தில் ஸ்ரீ ரஞ்சனிக்கும் இணைந்த கைககள் செந்தூரப்பூவே படங்களில் நடிகை நிரோஷாவின் குரலாக பேசியதும் ராதிகா தான். கருத்தம்மா படத்தில் ராஜஸ்ரீ குரலும் ராதிகா தான் பேசியிருந்தாா்.

அதே போல் நடிகர் மோகன் நடித்த 90 சதவீதம் படங்களில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் பாடகர் எஸ்என் சுரேந்தர். இவர் நடிகர் விஜயின் சொந்த தாய்மாமா தான். அதே போல் நடிகை பானுப்பிரியாவும் ஒரு பின்னணி குரல் கலைஞர். இந்தியன் படத்தில் ஊர்மிளா அருணாசலம் தெலுங்கு படத்தில் நடிகை ரம்பா, சூர்யவம்சம் படத்தில் நடிகை பிரியாராமன் ஆகியோர் குரலாக ஒலித்தது நடிகை பானுப்பிரியா தான்.

- Advertisement -

அதே போல் மௌன கீதங்கள் பிரண்ட்ஸ் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரிதா ஒரு பிரபலமான பின்னணி குரல் கலைஞர். எங்க சின்ன ராசா படத்தில் ராதா, குணா படத்தில் அபிராமி, காதல் தேசம் படத்தில் தபு மன்னன் படத்தில் விஜயசாந்தி எஜமான் படத்தில் மீனா பாட்ஷா காதலன் லவ்பேர்ட்ஸ் போன்ற படங்களில் நக்மாவின் குரலாக ஒலித்தது நடிகை சரிதா குரல்தான்.

இதே போல் நடிகர்கள் போஸ் வெங்கட் சேத்தன் மயில்சாமி சமுத்திரக்கனி ஜீவி பிரகாஷ்குமார் என பலரும் பல படங்களில் மற்ற நடிகர்களுக்கு பின்னணி குரலில் பேசியிருக்கின்றனர். குட்நைட் பட நடிகர் மணிகண்டன் ஒரு பலகுரல் மன்னன் என்பதால் சில நட்சத்திர நடிகர்கள் ஓரிரு வார்த்தைகள் இடையில் டப்பிங் திருத்தம் என்றால் மணிகண்டன்தான் பேச அழைக்கப்படுவது வழக்கம். இப்படி பலர் டப்பிங் கலைஞர்களாகவும் சினிமாவில் ஜெயித்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்