- Advertisement -
Homeபொழுதுபோக்குசம்பளத்தை திடீரென குறைத்த நடிகர் அஜீத்குமார், அப்பவும் ஓகே சொல்லாத பிரபல தயாரிப்பு நிறுவனம் -...

சம்பளத்தை திடீரென குறைத்த நடிகர் அஜீத்குமார், அப்பவும் ஓகே சொல்லாத பிரபல தயாரிப்பு நிறுவனம் – அப்படி ஒரு முடிவுக்கு வந்தாரா ஏகே?

- Advertisement -

விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது அடுத்த படத்தில் நடிக்காமல் இன்னும் இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படம் இன்னும் துவங்குவதற்காக அறிகுறியே இல்லை. காரணம் இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 280 கோடி ரூபாய். இதில் அஜீத்குமார் சம்பளம் மட்டுமே 185 கோடி ரூபாய். ஆனால் அந்த அளவுக்கு பெரிய பட்ஜெட் படம் எடுத்தால் அஜீத்குமார் படம் ஓடுமா என்றால் அதுவும் சாத்தியமில்லை. ஏனென்றால் அவரது மார்க்கெட் நிலவரப்படி வியாபாரமே ரூ. 225 கோடி மட்டும்தான்.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழலில்தான் எந்த தயாரிப்பாளரும் ரிஸ்க் எடுத்து அஜீத்குமார் படத்தை தயாரிக்க முன்வர மறுக்கிறார்கள். அதுவும் இப்போது டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. ஓடிடி நிறுவனங்களும் அடிமாட்டு விலைக்கு தான் படங்களை விலை பேசுகின்றன. அதுவும் பெரிய சிக்கலை தயாரிப்பாளர்களுக்கு தந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை அஜீத்குமார் தரப்பில் அணுகி பேசியிருக்கின்றனர். அஜீத்குமார் தனது சம்பளத்தை ரூ. 185 கோடியில் இருந்து ரூ. 20 கோடி குறைத்து ரூ. 165 கோடிக்கு நடிப்பதாக அஜீத் தரப்பில் கூறியிருக்கின்றனர். ஆனால் அதற்கு அந்நிறுவனம் சம்மதிக்கவில்லை.

- Advertisement -

அஜீத்குமாரை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு நஷ்டம் இல்லாத படமாக தான் அதை தயாரிக்க முடியும். அதனால் நீங்கள் சொல்கிற சம்பளத்தை ஏற்க முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூறி திருப்பி அனுப்பி விட்டனர். அதனால் ஏகே 64 படம் அப்படியே நகராமல் இருந்து வருகிறது.

இந்த சூழலில் ஏகே 64 படத்தை அஜீத்குமாரே சொந்தமாக தயாரிக்கலாமா என்றும் ஒரு பலத்த யோசனையில் இருந்து வருகிறார். அதுகுறித்து தனது ஆதரவாளர்களிடம் அவர் சமீபத்தில் ஆலோசித்துள்ளார். ஆனால் அஜீத்குமாரின் மார்க்கெட் நிலவரப்படி அவர் நடிக்கும் படத்தை அவரே தயாரித்தாலும் பெரிய நிதி இழப்புதான் ஏற்படும் என்று அஜீத்குமாருக்கு அவர்கள் அட்வைஸ் செய்ததாக தகவல் கசிந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்