- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் அதை கொண்டு வாங்க… நடிகர் விஜய் சேதுபதி போட்ட திடீர் கண்டிஷன், அப்செட் ஆன...

முதலில் அதை கொண்டு வாங்க… நடிகர் விஜய் சேதுபதி போட்ட திடீர் கண்டிஷன், அப்செட் ஆன ரஜினி பட டைரக்டர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனராக இருந்தாலும் பல வெற்றிப் படங்களை கொடுத்த மாஸ் ஹீரோவாக இருந்தாலும் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு தோல்வி படங்களை தந்துவிட்டால் மொத்த இமேஜூம் ஒரே நாளில் காலியாகி விடும். பழையபடி அதே செல்வாக்கும் இமேஜூம் வர தொடர்வெற்றிகளை தர வேண்டியது முக்கியம்.

சினிமா என்பது பரமபதம் விளையாட்டு மாதிரிதான். எந்த படம் ஏணியாக இருந்து இமேஜை உயரத்தில் ஏற்றி விடும், எந்த படம் பாம்பாக இருந்து அதளபாதாளத்துக்கு கீழே இறக்கிவிடும் என்பதை சொல்ல முடியாது. அப்படிதான் பல மாஸ் ஹீரோக்கள், மாஸ் டைரக்டர்கள் தொடர் தோல்விகளை சந்திப்பதால் இமேஜ் காலியாகி விடுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர்தான் சிறுத்தை சிவா. அவர் இயக்கிய சிறுத்தை வீரம் விஸ்வாசம் போன்ற படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. அதே நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த சூர்யா நடித்த கங்குவா போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவுக்கு பெரிய தோல்வி படங்களாக இருந்தன.

இந்நிலையில் அவருக்கு புதிய பட வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தலைவன் தலைவி படப்பிடிப்பு நடந்த போது நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் சந்தித்து உள்ளனர். அதுவும் அந்த படத்தில் வரும் கோவிலில்தான் அந்த சந்திப்பு ஏதேச்சையாக நடந்துள்ளது. அப்போது ஒரு கதையை சிறுத்தை சிவா சொல்ல, விஜய் சேதுபதியும் ஓகே சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து தலைவன் தலைவி படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்றும் கூறியிருக்கிறார். முதலில் நாம் அன்று கோவிலில் பேசிய கதையை பவுண்டரி ஸ்கிரிப்ட் ஆக எழுதி என்னிடம் கொடுங்கள். முழுமையாக படித்து பார்த்துவிட்டு அடுத்தது பற்றி பேசலாம் என்று நடிகர் விஜய் சேதுபதி கண்டிஷனாக கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் அஜீத்குமார் போன்ற டாப் ஸ்டார்கள் நடித்த படங்களை இயக்கிய டைரக்டர் நான். என்னிடமே நடிகர் விஜய் சேதுபதி பவுண்டரி ஸ்கிரிப்ட் கேட்கிறாரே என்று டைரக்டர் சிறுத்தை சிவா அப்செட் ஆகியிருக்கிறார். யாராக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால்தான் வெற்றி பெறும். என்கிட்டயே கேட்கிறாரே என்ற ஈகோவை விட்டுவிட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று அவரது நலம்விரும்பிகள் அவருக்கு அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்