- Advertisement -
Homeபொழுதுபோக்குவிவாகரத்துக்கு பிறகு மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா; இணையத்தில்...

விவாகரத்துக்கு பிறகு மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இணையத்தில் என்னன்னு குறிப்பிட்டு தனுஷ் பகிர்ந்திருக்கிறார் தெரியுமா?…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். உருவக்கேலி, நடிப்பு போதவில்லை என ஏராளமான விமர்சனங்களை கடந்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக அவர் வலம் வருகிறார். துள்ளுவதோ இளமை திரைப்படத்திலேயே தனது கேரக்டரின் ஆழத்தை புரிந்து கொண்டு அதை இயல்பாக செய்திருந்தார் தனுஷ். பிறகு காதல் கொண்டேன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

இப்படி இருக்க 2004 ஆம் ஆண்டு, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கரம் பிடித்தார் தனுஷ். இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு தரப்பு வீட்டு பெற்றோர் சம்பந்தத்துடன் இவர்கள் திருமணம் அரங்கேறியது. அப்போது தனுஷிற்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

- Advertisement -

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். மூத்த மகனுக்கு யாத்ரா என்றும், இளைய மகனுக்கு லிங்கா எனவும் பெயர் வைத்தனர். தனது மனைவியின் இயக்கத்தில், 3 எனும் திரைப்படத்திலும் தனுஷ் நடித்தார். இதனைத் தொடர்ந்து, வை ராஜா வை மற்றும் லால் சலாம் என இரண்டு திரைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார்.

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் நண்பர்களும், உறவினர்களும் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இதெல்லாம் உறுதி செய்யும் வகையில் அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் பிரிவதாக இணையத்தில் அறிவித்தனர்.

- Advertisement -

இதைக் கண்டு தமிழ் சினிமாவே அதிர்ச்சி அடைந்தது. ரசிகர்களும் இது குறித்து பேச ஆரம்பித்தனர். ஆனால் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என இருவரும் தெரிவித்து வந்தனர். விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட போதும் பொது நிகழ்ச்சிகளில், தனது இரு மகன்களுடன் தனுஷ் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இப்படியான சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களின் திருமணம் செல்லாது என்றும் அறிவித்தது. இந்த நிலையில், அவர்களின் மகன் யாத்ரா படிப்பை முடித்திருக்க, அது தொடர்பான நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். மகனை கட்டி அணைத்தவாறு இருவரும் தங்கள் பாசத்தை வெளிப்படுத்த, அது தொடர்பான புகைப்படத்தை தனுஷ் பகிர்ந்து உள்ளார். அதில் பெற்றோருக்கு பெருமைமிக்கது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்