- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் பாலிவுட் நடிகராக மாறுகிறாரா சூரி? ஓடிடி நிறுவனம் தந்த புது ஐடியா - மண்டாடி...

விரைவில் பாலிவுட் நடிகராக மாறுகிறாரா சூரி? ஓடிடி நிறுவனம் தந்த புது ஐடியா – மண்டாடி படத்துக்கு எகிறும் மவுசு!

- Advertisement -

நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் குமரேசன் என்ற கேரக்டரில் கான்ஸ்டபிளாக நடித்தார். விடுதலை முதல் பாகத்தில் சூரி கதாநாயகனாகவும் விடுதலை 2 பாகத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் இருந்தனர்.

விடுதலை படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி கருடன் கொட்டுக்காளி மாமன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் கொட்டுக்காளி பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் கருடன் மாமன் படங்கள் சூரிக்கு நல்ல பிரகாசமான வெற்றியை தந்தது. மாமன் படத்தின் கதை திரைக்கதையை சூரியே எழுதியிருந்த நிலையில் இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். கடலோர பகுதிகளில் வாழும் மக்களை பற்றிய கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. மஹிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளது.

மண்டாடி படத்தின் கண்டென்ட் வேற லெவலில் இருப்பதால் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 25 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் படத்தை பார்த்த நெட்பிளக்ஸ் நிறுவன அதிகாரிகள், மண்டாடி படத்தின் தயாரிப்பாளர்களிடம், இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் ஒரு அற்புதமான படமாக உள்ளது.

- Advertisement -

தமிழ் தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் மண்டாடி படத்தை டப்பிங் செய்து வெளியிடுங்கள். பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெறும் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும் இந்தியில் இந்த படத்தை வெளியிட இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடத்தி வரும் நிறுவனத்தை அணுகவும் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

ஒருவேளை அவர்கள் ஆலோசனைப்படி மண்டாடி படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியானால் அங்கும் ஒருவேளை சூரியை ரசிகர்கள் பெரிய வரவேற்புடன் ஏற்றுக்கொண்டால் இந்தி படங்களிலும் சூரி தொடர்ந்து நடிக்க வாய்ப்புள்ளது. அப்படி சூரி பாலிவுட் ஸ்டார் நடிகராக மாறிவிட்டால் அங்கும் அம்மன் ஓட்டல் கிளைகளை துவங்கி விடுவார் என்று ரசிகர்கள் ஆவலாக கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்