நடிகை திரிஷா என்னுடைய பிரியமான தோழி என்பதை திருமண வரவேற்பு விழாவில் ஜோடியாக பங்கேற்று நடிகர் தவெக தலைவர் விஜய் வெளிப்படையாக தெரிவித்து விட்டார். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் திரிஷாவுடன் ஒரே மாதிரியான ஆடையில் ஒரே காரில் ஜோடியாக வந்து திரிஷாவும் நானும் நெருக்கமான உறவில் இருப்பவர்கள் என்பதை அவர் உறுதி செய்துவிட்டார்.
இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, திரிஷாவின் இன்றைய வாழ்க்கை விஜயுடன் இப்படி உள்ளது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள், அவர் எப்படிபட்டவர், அவருக்கும் விஜய்க்கும் எப்படிப்பட்ட பழக்கம் என்பதை எல்லாம் விஜய் ரசிகர்களும் டிவிகே கட்சியினரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம்.
இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் திரிஷா ஜோடியாக நடித்தார். இந்த முதல் படத்தில் விஜய் திரிஷா இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து அவர்கள்இணைந்து நடித்த கில்லி படமும் சக்கைப் போடு போட்டது. அதற்கு பிறகு குருவி ஆதி படங்களில் விஜய் திரிஷா நடித்த நிலையில் அந்த 2 படங்களுமே மிக மோசமான தோல்வி படங்களாக இருந்தது.
அதன்பிறகு விஜய்க்கு திரிஷாவை ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. அதுபற்றி விஜயும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை திரிஷா, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று நேரில் நடிகர் விஜயிடம் உங்கள் படங்களில் மீண்டும் என்னை கதாநாயகியாக போடுங்கள். தயாரிப்பாளர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டார்.
அப்போது விஜய் கண்டிப்பாக முடியாது என்று மறுத்திருக்கிறார். அதனால் ஆவேசமடைந்த திரிஷா விஜயின் வீட்டு முன் வந்து புழுதி மண்ணை வாரி தூற்றி சாபம் விட்டிருக்கிறார். இந்த சம்பவம் உண்மையில் நடந்தது. இதனால் பல ஆண்டுகள் விஜய் மீது திரிஷா பயங்கர கோபத்தில் இருந்தார். இந்த சூழலில் நடிகர் விஜய் ஜெனிலியா ஹன்சிகா மோத்வானி ராஷ்மிகா மந்தனா அசின் நயன்தாரா போன்ற நாயகிகளுடன் ஜோடியாக பல படங்களில் நடித்தார்.
இதனால் திரிஷாவுக்கு விஜய் மீது கடுமையான கோபமும் வெறுப்பும் அவரை பழிவாங்கும் ஒரு ஆத்திரமும் இருந்துள்ளது. இந்த சூழலில் 96 பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த திரிஷாவின் இமேஜ் மீண்டும் உயர்ந்ததால் லியோ படத்தில் விஜய்க்கு திரிஷா மீண்டும் ஜோடியாக நடித்தார். இந்த சூழலில் விஜயை பழிவாங்கும் எண்ணத்தில் அவருடன் நெருக்கமான உறவில் நடிகை திரிஷா இப்போது இருக்கிறார். விஜய் வீட்டின் முன்பு மண்ணை வாரி தூற்றிய அவர் இப்போது அவரது தவெக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே களத்தில் இறங்கியிருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.





