- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் துருவ நட்சத்திரம் - ரிலீஸ் தேதி இதுதான் -...

8 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் துருவ நட்சத்திரம் – ரிலீஸ் தேதி இதுதான் – ரஜினி பட வில்லன் இதுல வேற லெவலா நடிச்சிருக்காராமே?

- Advertisement -

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி தயாரித்த படம் துருவ நட்சத்திரம். முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த இந்த படத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 2017 அல்லது 2018ம் ஆண்டில் வெளியாக வேண்டிய இந்த படம் வெகு தாமதமாக ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திரைக்கு வர உள்ளது.

பல்வேறு கடன் பிரச்னைகளில் சிக்கி பலமுறை தள்ளிப் போடப்பட்ட இந்த படம் சட்ட ரீதியாக வருகிற ஜூன் 15ம் தேதிக்குள் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் உள்ள நிலையில் இந்த படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கி ரிலீஸ் செய்ய வினியோகஸ்தர்களும் ஆர்வமாக உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் வருகிற 28ம் தேதி துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் ரா ஏஜண்ட் கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில்தான் நடிகர் ஆர்யா நடித்த மிஸ்டர் எக்ஸ் படம் வெளியானது. இதில் ஆர்யா ரா ஏஜண்டாக நடித்திருந்தார். ஆனால் 8 ஆண்டுகளுக்கு முன்பே ரா ஏஜண்ட் ஆக விக்ரம் நடித்திருக்கிறார்.

இந்த துருவ நட்சத்திரம் படத்தின் கதைக்களமும் ஸ்பை திரில்லர் அடிப்படையில்தான் உருவாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் மலையாள வில்லன் நடிகர் விநாயகம் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு பல இடங்களில் ரசிகர்களை மிரட்டும் என்றும் குறிப்பாக இடைவேளை காட்சியில் அவரது அதகளம் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நடிகர் விக்ரமுக்கு நீண்ட நாட்களாகவே பெரிய வெற்றிப் படம் எதுவும் இல்லை. சாமி படத்துக்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் பலத்த ஏமாற்றத்தை தந்தன. குறிப்பாக தங்கலான் சாமி 2 வீர தீர சூரன் 2 கோப்ரா மஹான் என பல படங்கள் பெரிய ஏமாற்றத்தை தந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முந்தைய படமாக துருவ நட்சத்திரம் பெரிய கம்பேக் தரும் என்று சொல்லப்படுகிறது.

கடந்தாண்டில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மதகஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி சக்கைப் போடு போட்டது. அந்த படம் 2012ல் எடுக்கப்பட்டு 2013ல் ரிலீஸாக வேண்டிய படம். ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2025ம் ஆண்டில் பொங்கலுக்கு வெளியானது. அதே போல் 8 ஆண்டுகளுக்கு பிறகு வரும் துருவ நட்சத்திரமும் பிரகாசமான வெற்றியை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்