- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் நடித்த கர படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு? - கலவையான...

நடிகர் தனுஷ் நடித்த கர படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு? – கலவையான விமர்சனங்களால் பின்வாங்கிய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

- Advertisement -

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடிகர் தனுஷ் நடித்த கர படம் வெளியானது. போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ்ராஜா இயக்கம் என்பதால் இந்த படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்தது. மேலும் இந்த படம் பெரிய ஹிட் கொடுக்கும் என்றும் கருதப்பட்டது.

ஆனால் கர படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. குறிப்பாக போர்த்தொழில் போன்ற ஒரு மிரட்டலா க்ரைம் திரில்லர் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த படத்தில் அதே போல் ஒரு தரமான சம்பவத்தை செய்திருப்பார் என்று நினைத்த தனுஷ் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

இந்த படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்த மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு மற்றும் தனுஷின் அப்பா கேரக்டரில் நடித்த கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் பல காட்சிகளில் அதற்கான அழுத்தமும் விறுவிறுப்பும் இல்லை என்றும் கூறப்பட்டது.

நடிகர் தனுஷை பொருத்த வரை எந்த கேரக்டர் என்றாலும் அவரது அழுத்தமான நேர்த்தியான நடிப்பு ரசிகர்களை திருப்திபடுத்தி விடுகிறது. எனினும் கதைக்களத்தில் விறுவிறுப்பும் திரைக்கதை ஓட்டத்தில் சுறுசுறுப்பும் இல்லாத போது நடிகர் தனுஷின் நடிப்பு மட்டுமே படத்தின் வெற்றிக்கு உதவாது என்றும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

இப்படிப்பட்ட சூழலில் கடந்த 30ம் தேதி வெளியான இந்த படம் 3 நாட்களில் மொத்தம் 26 கோடி ரூபாய் மட்டுமே வசூலை கடந்துள்ளது. அதிலும் முதல் நாளிலும் 2வது நாளிலும் இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வசூல் இருக்கவில்லை. குறிப்பாக முன்பதிவில் கூட தியேட்டர்களில் பெரிய ஏமாற்றமே இருந்ததாகவும் கூறப்பட்டது.

தேர்தல் சமயத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யாமல் தவிர்ப்பதே நல்லது. சட்டசபை தேர்தல் முடிவுக்காக மக்கள் ஆவலாக காத்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் கர படம் வெளியாகாமல் இன்னும் ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்திருக்கலாம். பலருக்கும் கர படம் குறித்த கவனமே இல்லை. இதுவும் படத்தின் வசூல் கணிசமாக சரிய காரணம் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்