தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் படங்களுக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். ஆனால் இந்தியில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர கிடைப்பது இல்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இதுபற்றி ஏஆர் ரகுமான் பேசினார். இந்தியில் தனக்கு சினிமா வாய்ப்புகள் குறைவதற்கு காரணமாக சில விஷயங்களை குறிப்பிட்டார்.
அப்போது ஏஆர் ரகுமான் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சினிமா துறை சமூகம் சார்பானதாக மாறிவிட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்கள் அனைத்து முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
ஏஆர் ரகுமானின் இந்த கருத்து அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாக இந்தி சினிமா சார்ந்த பிரபலங்கள் சிலரும் அவருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்த நிலையில் இது குறித்து ஏஆர் ரகுமான் விளக்கமும் அளித்திருந்தார். இந்த நிலையில் பாலிவுட் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே ஸ்வாதி சதுர்வேதி தனது எக்ஸ் பதிவில் ஒரு காட்டமான பதிவை செய்திருந்தார்.
அதில் அவர், ஏஆர் ரகுமானின் இந்த கருத்துக்கள் ரொம்பவே புண்படுத்துவதாக இருக்கிறது. ஒருமுறை அவரை நான் நேர்காணல் செய்த போது அவரிடம் அவரது மா துஜே சலாம் என்கிற வந்தே மாதரம் பாடலை ஒரு சில வரிகளாவது பாடுங்கள் அல்லது ஹம்மிங்காவது செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் அதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
பொதுவாக இசைக்கலைஞர்கள் இதுபோன்ற நேர்காணல்களில் இப்படி பாடுவதை புறக்கணிக்க மாட்டார்கள் என்பதால் அவரது செயல் என்னை ரொம்பவே அப்செட் செய்து விட்டது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக பாடகி சின்மயி பதிலடி தந்திருக்கிறார். இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் சின்மயி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஏஆர் ரகுமான் கடந்த 2025 நவம்பரில் ஆர்கே லட்சுமணனின் நினைவு அவார்டு கான்செர்ட்டில் கூட மா துஜே சலாம் பாடலை பாடினார்.
அது மட்டுமல்ல. ஒவ்வொரு கான்செர்ட்டிலும் கூட இந்த பாடலை அவர் தவறாது பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஒருவேளை நிகழ்த்தி தொகுப்பாளர் நேர்காணல் செய்த போது ஏஆர் ரகுமானுக்கு பாடுவதற்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம். அல்லது அப்போது அவர் பாடுவது பாடுவது சரியாக இருக்காது என்று நினைத்திருக்கலாம். தவிர அவர் ஒருபோதும் வந்தே மாதரம் பாடலை புறக்கணித்தது இல்லை என்று சின்மயி பதிலடியாக கூறியிருக்கிறார்.





