- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரும்பு கை மாயாவி முதலில் யாருக்கு எழுதிய கதை தெரியுமா... மாநகரம் முதல் தலைவர் 171...

இரும்பு கை மாயாவி முதலில் யாருக்கு எழுதிய கதை தெரியுமா… மாநகரம் முதல் தலைவர் 171 வரையிலான சுவாரஸ்சியங்களை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்ற முடிக்க தற்போது புரோமோஷனுக்கான பணிகள் மும்முரமாக தொடர்கிறது. படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாக, டிரெய்லரும் ரசிகர்களை கவர்ந்தது.

லியோவிற்கு தணிக்கைக் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது. 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தில், 13 இடங்களில் காட்சிகளை தணிக்கைக் குழு நீக்கியுள்ளது. இதேபோல் கெட்ட வார்த்தைகளும் மியூட் செய்யப்பட்டுள்ளன. படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

லியோவில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் தனி ஒருவனாக ப்ரோமோஷன் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், ரசிகர்களுக்கு தெரியாத சுவாரஸ்சியமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, இரும்பு கை மாயாவி திரைப்படத்திற்கான கதையை முதலில் கார்த்தியை வைத்துதான் எழுதினேன். பிறகு தயாரிப்பாளர் பிரபுதான், சூர்யாவை வைத்து எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். அந்த நேரத்தில் சிஜி பணிகள் குறித்த பணிகள் எனக்கு தெரியாமல் போனதால், இரும்பு கை மாயாவியை தொடவில்லை. இப்போது அதற்கான தைரியமும், ஆற்றலும் கிடைத்துள்ளது. அதனை எடுக்க தயாராக இருக்கிறேன்.

- Advertisement -

தலைவர் 171வது திரைப்படம், எல்சியுவில் வராது. இதற்கான கதையை அவரிடம் கூறும்போது, சூப்பராக இருப்பதாக கூறிய ரஜினிகாந்த், உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்தார். மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன். சூர்யா, கார்த்தியை அதில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது கைகூடாமல் போய் விட்டது.

லியோவில் கடைசி 35 – 40 நிமிடங்கள் நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. விக்ரம் படத்தை பார்த்த தளபதி விஜய், சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு பாராட்டினார். அவரது கதாபாத்திர வடிவமைப்பு சூப்பராக உள்ளதென தளபதி கூறினார். ரஜினி படத்தை தொடர்ந்து கைதி 2 பண்ணுகிறேன். விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தோடு எல்சியு முடியும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்