- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் அதிகாலை காட்சிகள், படப்பிடிப்பு நடத்த அனுமதி சான்று - நாளைய முதல்வருக்கு இப்போதே தமிழ்...

மீண்டும் அதிகாலை காட்சிகள், படப்பிடிப்பு நடத்த அனுமதி சான்று – நாளைய முதல்வருக்கு இப்போதே தமிழ் சினிமாத்துறை தரப்பில் எழுந்த கோரிக்கை!

- Advertisement -

தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் அதிகாலை 4 மணி காட்சி என்பது முன்பு வழக்கத்தில் இருந்தது. முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாளில் அதிகாலை 4 மணி காட்சி என்கிற வழக்கம் இருந்தது. இப்போதும் அரசு விடுமுறை நாட்களில் வெளியாகும் படங்கள் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு அனுமதிக்கிறது.

அரசு விடுமுறை அல்லாத நாட்களில் வெளியாகும் படங்களுக்கு படம் ரிலீஸாகும் முதல் நாளில் மட்டும் 5 காட்சிகள் திரையிட்டுக்கொள்ள அரசிடம் விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். இப்படி ஒரு மாற்றம் ஏற்பட காரணம், கடந்த 2023ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான்.

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் அஜீத்குமார் நடித்த துணிவு படம் வெளியானது. அந்த படத்தின் அதிகாலை 4 மணி காட்சியின் போது ரசிகர் ஒருவர் லாரியின் மீது ஏறி ஆடிய நிலையில் லாரியில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார். அதன் பின்பு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி தருவதை அன்றைய திமுக அரசு ரத்து செய்தது. காலை 9 மணி முதல் இரவு 11 வரையான காட்சிகளுக்கு மட்டுமே தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ரஜினி கமல் விஜய் அஜீத் என முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியான போதும்கூட எந்த விதமான அனுமதியும் தரவில்லை. இப்போது விஜய் தலைமையிலான ஆட்சி விரைவில் அமைய உள்ளது. அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தால் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பாரா என்று எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

- Advertisement -

விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படமும் விரைவில் வெளியாக உள்ளது. இரவு 11 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் முடிய 2 மணி கூட ஆகிறது. அதற்கடுத்து அதிகாலை 5 மணிக்கு 6 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தமிழ் திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல் திரைப்பட படப்பிடிப்புகள் நடத்திக் கொள்ள அனுமதி கிடைப்பதிலும் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. படங்களுக்கு வெளிப்புற தளங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு அதிகாரியிடம் அனுமதி சான்று பெறுவதில் அதிக கால தாமதம் ஏற்படுவதால் பல நேரங்களில் படப்பிடிப்பு வார கணக்கில் மாதக்கணக்கில் தாமதமாகிறது. எனவே இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கவும் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் சினிமாத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்