- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய எதிரியை சந்தித்த முதல்வர் விஜயும் எனக்கு இனி எதிரிதான் - பிரபல நடிகை தந்த...

என்னுடைய எதிரியை சந்தித்த முதல்வர் விஜயும் எனக்கு இனி எதிரிதான் – பிரபல நடிகை தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரண்ட்ஸ் எஸ் மேடம் ராமச்சந்திரா பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அவருக்கு பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பில்லை. கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் தனது நோய்வாய்ப்பட்ட அக்காவுடன் விஜயலட்சுமி இருந்து வருகிறார்.

இதற்கிடையே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயக்குனர் சீமான் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டு பலமுறை வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சீமான் மீது கோர்ட்டில் வழக்குகளும் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜயலட்சுமி கோரிக்கை விடுத்திருந்தார். சமீபத்தில் தவெக தலைவர் தற்போதைய முதல்வர் விஜய்க்கும் தவெகவில் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய், நேற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வணக்கம் மக்களே. முதலமைச்சர் விஜய் சில அரசியல் தலைவர்களை சந்தித்து இருந்தார்.நீங்கள் விஜய்க்கு சப்போர்ட்டாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எதிரியை சீமானை விஜய் சந்தித்திருக்கிறார் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள்.

- Advertisement -

ஸ்டாலின் சார் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. அவரை வைகோவை விஜய் சந்தித்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். ஆனால் ஒரு அரசியல்வாதி வீட்டுக்கு அவர் சென்றதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதல்வர் விஜய் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது அவருடைய விருப்பம் முடிவு. பரப்புரையில் திட்டிக்கொண்டு பிறகு நேரில் போய் கட்டிப்பிடிப்பது எல்லாமே மக்களுக்கு ரொம்பவே குழம்பும். என் அக்காவையும் என்னையும் காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டில் வாழவிடுங்கள் என எத்தனையோ வீடியோக்களை போட்டு இருக்கிறேன்.

மாறாக அனைவருமே அந்த அரசியல்வாதியை சந்தித்து சப்போர்ட் செய்கிறார்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. மக்களுக்கு நன்றி. என்னை கொச்சைப்படுத்தியவர்களுக்கு நீங்கள் தான் பாடப் புகட்டினீர்கள். இதுதான் கடைசி வீடியோ. இனிமேல் வாழ்வோ சாவோ கர்நாடகாவில் பார்த்துக் கொள்கிறேன். என்னுடைய எதிரியை ஒருவர் சந்தித்தால் அவரும் இனி எனக்கு எதிரிதான் என்று நடிகை விஜயலட்சுமி வீடியோவில் கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்