தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரேவதி. ஆண்பாவம் மௌனராகம் மகளிர் மட்டும் புன்னகை மன்னன் கை கொடுக்கும் கை தெய்வவாக்கு கிழக்குவாசல் என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்போதும் ரேவதிக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பும் ஆதரவும் இருக்கிறது.
இந்நிலையில் நடிகை ரேவதி தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, நேற்று இரவு ஒரு உணவகத்தில் ஒரு பழக்கமான முகத்தை பார்க்க நேர்ந்தது. என் நண்பர் ஒருவர் அது கீர்த்தனா என்று எனக்கு சுட்டிக் காட்டினார். அவர் தவெக கட்சியின் இளைய எம்எல்ஏ. சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கடந்த 1996ம் ஆண்டில் பிறந்தவர். கணிதத்தில் பிஎஸ்சி மற்றும் புள்ளியியலில் எம்எஸ்சி படித்தவர். கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய அரசியல் கட்சிகளுடன் உத்தியாளராக பணியாற்றி வேலையிலேயே கற்றுக் கொண்டவர். மாற்றமாக இருப்பதில் கவனமும் உறுதியும் தான் அவர் பேசியது. எதிர்கால அரசியலும் அரசியல்வாதிகளும் இப்படித்தான் இருக்க வேண்டும்.
தங்கள் பணியை செய்யும் மக்களிடையே நடந்து பிரச்சனைகளை தனிப்பட்ட முறையில் புரிந்து கொண்டு மக்களுடன் இணைந்து தீர்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கீர்த்தனா தன் கொள்கைகளில் உறுதியாக இருந்து வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்த பாதையில் நடக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
சக்தி அவருக்கு வலிமையாக இருக்கட்டும். பலவீனமாக அல்ல. தொலைநோக்கு கொண்ட இத்தகைய இளைஞர்கள் நம் அரசில் பங்கேற்பதை பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று நடிகை ரேவதி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கீர்த்தனாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். தமிழக தவெக அமைச்சராவியில் இளம் பெண் அமைச்சராக இருப்பவர் கீர்த்தனா. அவருக்கு தொழில்துறை இலாகா நேற்று ஒதுக்கப்பட்டது.
சிவகாசி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் இவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை நேற்று இரவு நடிகை ரேவதி திடீரென சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்துதான் தனது வலைதள பக்கத்தில் இப்படி ஒரு பதிவை நடிகை ரேவதி செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





