- Advertisement -
Homeபொழுதுபோக்குஜார்ஜ் குட்டி குடும்பத்தை உங்கள் குடும்பமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி - திரிஷ்யம் 3 படம் குறித்து...

ஜார்ஜ் குட்டி குடும்பத்தை உங்கள் குடும்பமாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி – திரிஷ்யம் 3 படம் குறித்து நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி!

- Advertisement -

மலையாள படங்கள் எப்போதுமே கதையை மட்டுமே மையமாக வைத்து உருவாகின்றன. தமிழ் சினிமாவை போல அங்கு ஹீரோக்களுக்கான படங்கள் இல்லை. தமிழ் படங்களை போல ஹீரோவை கொம்பாதி கொம்பனாக காட்டும், ஹீரோயிசத்தை தூக்கி பிடிக்கும் படங்கள் மலையாளத்தில் வருவதில்லை.

அதனால்தான் மலையாளத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மனங்களில் நிலைத்து நிற்கின்றன. அந்த வகையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தில் மோகன்லால் – மீனா நடித்திருந்தனர்.

- Advertisement -

இதே படம் தமிழில் ஜீத்து மாதவன் இயக்கத்தில் பாபநாசம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. கமல்ஹாசன் கௌதமி நடித்த இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. தொடர்ந்து திரிஷ்யம் 2 படமும் மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் தமிழில் திரிஷ்யம் 2ம் பாகம் ரீமேக் செய்யப்படவில்லை. ஆனால் இந்தியில் திரிஷ்யம் படம் 3 பாகங்களாக உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது திரிஷ்யம் 3 படம் மலையாளத்தில் நேற்று வெளியாகி உள்ளது. வழக்கம் போல இந்த படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுகுறித்து படத்தின் நாயகன் மோகன்லால் ஒரு பதிவை செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த பதிவில், திரிஷ்யம் 3 (Drishyam 3) மிகுந்த அன்பு, பேரார்வம் மற்றும் நன்றியுணர்வுடன் உருவாக்கப்பட்டது. உங்கள் வரவேற்பின் வாயிலாக அந்த அன்பு எங்களுக்கே திரும்ப வருவதைக் காண்பது, நெஞ்சத்தை ஆழமாக நெகிழச் செய்வதாக அமைந்துள்ளது. உங்கள் விமர்சனங்கள், உங்கள் வார்த்தைகள் மற்றும் நீங்கள் பகிர்ந்துகொண்ட உணர்வுகள் ஆகியவை எத்தகைய எண்ணிக்கையிலான சாதனைகளை விடவும் எனக்குப் பன்மடங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

இப்படத்தைப் பார்த்தமைக்கும் அதனுடன் ஒன்றிணைந்தமைக்கும் ஒவ்வொரு கணத்தையும் உணர்ந்து ரசித்தமைக்கும், ஜார்ஜ் குட்டியையும் அவரது குடும்பத்தையும் உங்கள் சொந்தக் குடும்பமாகவே ஏற்றுக்கொண்டமைக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி என்று தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்