- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதையுமே நொட்டை சொல்பவர் மிஷ்கின், ஊர்வசிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் - சீக்ரெட்டுகளை பகிர்ந்த இயக்குனர்...

எதையுமே நொட்டை சொல்பவர் மிஷ்கின், ஊர்வசிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – சீக்ரெட்டுகளை பகிர்ந்த இயக்குனர் பாண்டிராஜ்!

- Advertisement -

தலைவன் தலைவி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்த படம் வருகிற 28ம் தேதி ரிலீசாக உள்ளது. நடிகர் ஜெயராம் நடிகைகள் ஊர்வசி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அனந்திகா இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

பரிமளா அண்ட் கோ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது, தலைவன் தலைவி படத்துக்கு பிறகு பெரிய ஹீரோக்கள் படம் எல்லாம் வந்தது. எல்லாருமே ரொம்ப ஆர்வமாக இருந்தாங்க. பிறகு நான் ஜெயராம் சாருக்கும் ஊர்வசி அம்மாவுக்கும் கதை சொன்னேன். இரண்டு பேருமே அவ்வளவு ரசிச்சாங்க.

- Advertisement -

ஊர்வசி சிரித்துக்கொண்டே கதை கேட்டாங்க. எனக்கு அங்கு ஒரு நம்பிக்கை வந்தது. ஜெயராம் சாரும் கதையை கேட்டுட்டு, சார் சூப்பரா இருக்கு. இது வந்து கண்டிப்பா ஹிட்டாகும் சார் என்று சொன்னார். இந்த இரண்டு லெஜென்டும் வந்து இதைச் சொல்லும் போது எனக்கும் நம்பிக்கை கிடைத்தது.

அப்புறம் மிஷ்கின் சாருக்கு கதை சொன்னேன். அவரும் ரொம்ப நல்லா இருக்கு. படத்தை பண்ணலாம். கமர்சியலா சூப்பரா இருக்கும். நான் பண்றேன்னு சொல்லிட்டார். ஏன்னா மிஸ்கின் சார் எல்லாத்தையும் நொட்டை சொல்கிற கேரக்டர். அவர் இதை ஓகே சொல்லும் போது எனக்கும் நம்பிக்கை வந்தது. ஊர்வசியை நாங்கள் அம்மா அம்மான்னு தான் கூப்பிடுவோம்.

- Advertisement -

இந்த படத்தை பாலக்காட்டில் சூட்டிங் செய்துகிட்டு இருந்தோம். அங்கு போன முதல் நாளே ஊர்வசியோட அண்ணன் இறந்துவிட்டார் என்கிற தகவல் வந்தது. எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலே. படத்துக்காக பெரிய செட் அங்க போட்டுட்டோம். அப்போ ஊர்வசி அம்மா, பாண்டி நீ கவலைப்படாதே. நீங்க ஷூட்டிங் கேன்சல் பண்ண வேண்டாம். நான் போயிட்டு மறுநாளே வந்துடுறேன்னு சொல்லி மறுநாளே படப்பிடிப்புக்கு வந்தாங்க.

அதுல பெரிய சவால் என்னவென்றால் பயங்கர காமெடியான சீன்ல அன்னிக்கு ஊர்வசி நடிக்கணும். அது ரொம்பவும் கஷ்டம். ஒரு சோகத்தில் இருக்கிற அவங்களால எப்படி காமெடியா பண்ண முடியும் என்று நான் யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா அந்த சீன்ல பிரமாதமா ஊர்வசி அம்மா நடிச்சிட்டாங்க என்று இயக்குனர் பாண்டிராஜ் அப்போது கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்