- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்?...

நாளை விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? கேள்வி எழுப்பிய நடிகர் விஷால் – என்ன பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் ஸ்டார் நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார். தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். இதில் 2வது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார், இந்த படத்தில் மமிதா பைஜூ, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், நரேன், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 5ம் தேதி கேரள மாநிலம் பையனூரில் துவங்கியது. இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 20 நாட்கள் படப்பிடிப்பு, 10 நாட்கள் அரசியல் பணி என்ற ஷெட்யூலில் இந்த படத்தில் விஜய் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடத்துகிறார். மிகப் பிரமாண்டமாக அரசியல் மாநாடு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் விஷால் கூறியதாவது, விஜய்க்கு முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது நடிகர் விஜய் தான்.

மக்களுக்கு விஜய் என்ன செய்யப் போகிறார். அவர் மனதில் என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்றெல்லாம் அறிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன். விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் அல்ல. அது மிகப்பெரிய முடிவு. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஒருவர் அதை விட்டு விலகி மக்களுக்காக வருகிறேன் என்று சொல்வது மிகவும் வரவேற்க கூடிய விஷயம். அவருக்கு கடவுள் அருள் நிச்சயம் உண்டு. மாநாட்டுக்கு செல்வது குறித்து நான் எதுவும் முடிவு செய்யவில்லை. மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறேன் என்று விஷால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்