- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 2 விஷயங்களை நீங்க கன்சிடர் பண்ணனும் - தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் விஜய்...

அந்த 2 விஷயங்களை நீங்க கன்சிடர் பண்ணனும் – தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி வைத்த முக்கிய கோரிக்கைகள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஓடிடி வணிகம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என 2 விதமான வருமானங்களில் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் கணிசமான லாபத்தை வருவாயை ஓடிடி நிறுவனங்கள் தந்தன.

ஆனால் சமீபகாலமாக ஓடிடி நிறுவனங்கள் தங்களது விலை கணிசமாக குறைத்துக்கொண்டு உள்ளன. நட்சத்திர நடிகர்களின் படங்களை கூட மிக குறைவான விலைக்கே கேட்கின்றன. 2ம் நிலை ஹீரோக்கள் நடித்த பல படங்கள் ஓடிடி வியாபாரமின்றி ரிலீஸ் ஆகாமல் முடங்கி உள்ளன.

- Advertisement -

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியான ஒரு கோரிக்கை. சார் கமல் சார் கேட்டுக்கிட்ட மாதிரி சீக்கிரம் தமிழக அரசு ஒரு ஓடிடி ஆரம்பித்தால் நல்லா இருக்கும் சார்.

ஆமா சார். ஓடிடி மார்க்கெட் என்று திடீர்ன்னு ஒண்ணு வந்தது. அப்படியே மேல ஏத்திக்கிட்டு போனாங்க. டப்புன்னு விட்டுட்டாங்க. இப்போ எங்க போறதுன்னு தெரியாத மாதிரி இருக்குது. நிறைய இடத்துல பிஸினஸ் என்ன பண்றதுன்னே தெரியலே.

- Advertisement -

ரொம்பவும் குழப்பமா இருக்குது. அதனால் ஓடிடின்னு ஒன்று இருந்தால் அதை அரசு செயல்படுத்தினால் நல்லா இருக்கும். அதே மாதிரி தியேட்டர் டிக்கெட் விலை எல்லாம் ஏறி ரொம்ப வருஷம் ஆச்சு. விலை எல்லாம் நிறைய ஏறியிருக்கு.

அதனால் தியேட்டர் டிக்கெட் விலை கொஞ்சம் ஏத்தினா நல்லா இருக்கும். அதையும் கன்சிடர் பண்ணினால் நல்லா இருக்கும். மிக்க நன்றி சார் என்று நடிகர் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். தமிழக அரசே ஓடிடி நிறுவனம் நடத்த வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறியிருப்பது நல்ல கோரிக்கை என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்