தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் நாகார்ஜூனா. தமிழில் உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் கூலி குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரது மகன் நடிகர் நாக சைதன்யா. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவுடன் சில படங்களில் இணைந்து நடித்த நிலையில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ம் ஆண்டில் அவர்கள் திருமணம் விமரிசையாக நடந்தது. ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே அவர்கள் இணைந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். அதே போல் நடிகை சமந்தாவும் சிட்டாடல் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நெடிமூர் என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி கோவை ஈஷா மையத்தில் அவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது.
இந்நிலையில் முதல் மனைவி சமந்தாவுக்கு நடிகர் நாக சைதன்யா துரோகம் செய்ததாக அவர் மீது நீண்ட காலமாக விமர்சனம் இருந்து வருகிறது. அதை எதிர்த்து இப்போது நீதிமன்றத்தில் நாக சைதன்யா வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தனது முன்னாள் மனைவி மற்றும் தனது பெயரை குறிப்பிட்டு பொய்யான தகவலை பரப்பி வரும் யூடியூப்பில் இருக்கும் ட்ரோல் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று நடிகர் நாக சைதன்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
மேலும் தனது பெயரை பயன்படுத்தி சில ஆபாச இணையதளங்களில் வீடியோக்கள் வருவதாகவும் அவற்றையும் நீக்க வேண்டும் எனவும் அந்த வழக்கில் நடிகர் நாக சைதன்யா கோரிக்கை விடுத்திருக்கிறார். இதை பர்சனாலிட்டி ரைட்ஸ் பாதுகாக்க மட்டுமே வழக்காக பதிவு செய்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு யூடியூப் மற்றும் கூகுள் இதில் 8வது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டன. இது பற்றி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற தளங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.





