- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்துக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் சிறுத்தை சிவா - படத்தின் ஹீரோ...

கங்குவா படத்துக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் சிறுத்தை சிவா – படத்தின் ஹீரோ அந்த மாஸ் ஹீரோவா? இது வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. சிறுத்தை படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு கோலிவுட்டில் சிறுத்தை சிவா என்றே அவர் அழைக்கப்படுகிறார். தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடித்த வீரம் விவேகம் விஸ்வாசம் வேதாளம் போன்ற படங்களை இயக்கினார்.

இதில் வீரம் விஸ்வாசம் ஆகிய படங்கள் மாபெரும் ஹிட் படங்களாக இருந்தன. விவேகம் வேதாளம் படங்களும் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வணிக ரீதியாக நல்ல வசூலை கொடுத்தன. இந்த நிலையில் சிறுத்தை சிவா நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

- Advertisement -

ரஜினிக்கும் இந்த படம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய படம் கங்குவா. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. தமிழ் சினிமாவின் 2000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்று கூறப்பட்ட இந்த படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வி அடைந்தது.

இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் தாறுமாறாக விமர்சித்தனர். இணையத்தில் மிக மோசமாக பலரும் கங்குவா படம் குறித்து கமெண்ட் செய்தனர். 2024ம் ஆண்டில் வெளியான ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படத்தை விடவும் கங்குவா படம் தகுதியற்ற ஒரு மிக மோசமான படமாக என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

அதனால் அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் இயக்குனர் சிறுத்தை சிவா கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க சிறுத்தை சிவா கமிட் செய்யப்பட்டுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் படமாக இந்த படம் உருவாக உள்ளது. ஏற்கனவே கமிட்டான படங்களை முடித்து விட்டுதான் நடிகர் தனுஷ் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அத்துடன் ஏற்கனவே நடிகர் அஜீத்குமாரின் படத்தை இயக்கவும் சிறுத்தை சிவா கமிட் ஆகியுள்ளார். இன்னும் சில மாதங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏகே 64 படத்தை இயக்க வேண்டிய ஆதிக் ரவிச்சந்திரன் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். அதனால் அஜீத்குமாரின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது. அதன்பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்