- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களுக்கு தைரியம் வந்தா சொல்லுங்க - எங்களுக்கு எந்த பயமோ தயக்கமோ இல்லே, இயக்குனர் எச்...

உங்களுக்கு தைரியம் வந்தா சொல்லுங்க – எங்களுக்கு எந்த பயமோ தயக்கமோ இல்லே, இயக்குனர் எச் வினோத்துக்கு சவால் விடுத்த பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்தாண்டில் உருவான படம் ஜனநாயகன். கடந்த தீபாவளிக்கே திரைக்கு வர வேண்டிய இந்த படத்தை படக்குழு தான் 2026 பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்து ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் எனவும் அறிவித்தது. ஆனால் படம் அந்த நாளில் வெளியாகவில்லை.

இப்போது 5 மாதங்கள் கடந்த நிலையிலும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது. வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று தகவல் இருந்தாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதை உறுதி செய்யவில்லை.

- Advertisement -

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் எச் வினோத்திடம் இதுகுறித்து கேட்ட போது, ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கான உண்மையான காரணங்களை சொல்ல எனக்கு தைரியம் இல்லை. அப்படியே அதை நான் தைரியமாக சொன்னாலும் உங்களால் ( ஊடகங்களால்) அதை தைரியமாக போட முடியாது என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, இயக்குனர் எச் வினோத்துக்கு தைரியம் வந்தால் அந்த உண்மைகளை வெளிப்படையாக சொல்லட்டும். நாங்கள் அதை மக்களுக்கு சொல்கிறோம். உண்மையை சொல்வதில் எங்களுக்கு பயமோ தயக்கமோ சிறிதும் கிடையாது.

- Advertisement -

மக்களிடம் உண்மைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களை போன்ற பத்திரிகையாளர்களின் நோக்கம். அதனால் ஒட்டுமொத்தமாக ஊடகங்களும் பத்திரிகைளும் யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் சொல்வது போல் உள்ளது. நாங்கள் உண்மைகளை சொல்கிறோம்.

நீங்கள் பொதுவெளியில் சொல்லாவிட்டாலும் எங்களிடம் போனில் சொல்லுங்கள். நாங்கள் உண்மைகளை மக்களுக்கு சொல்கிறோம். ஆனால் ஏற்கனவே நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஜனநாயகன் படம் ரிலீஸில் படத்தில் பிரச்னை இல்லை. வெளியில்தான் பிரச்னை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம் என்று பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்