- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சமந்தாவை பார்த்து நான் பயப்படவில்லை, தெறி இந்தி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து ஓபனாக...

நடிகை சமந்தாவை பார்த்து நான் பயப்படவில்லை, தெறி இந்தி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து ஓபனாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அவர் தனது 69வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து 2வது முறையாக பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் கௌதம் மேனன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. அதிலும் தெறி படத்தில் விஜய் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவரது மனைவியாக சமந்தா நடித்திருப்பார். அவரது காதலியாக எமி ஜாக்சன் நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தின் விஜயின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். விஜயின் அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமாரும் விஜயின் போலீஸ் ஜீப் டிரைவராக மொட்டை ராஜேந்திரனும், போலீஸ் கான்ஸ்டபிள் ஆக காளி வெங்கட்டும் நடித்திருந்தனர். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் டைரக்டர் மகேந்திரன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. மேலும் நடிகர் பிரபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தெறி படத்தை இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் விஜய் நடித்த ரோலில் வருண் தவான், சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்திருக்கிறார். இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான நாளை திரைக்கு வருகிறது.

- Advertisement -

சமீபத்தில் தனது நீண்ட கால காதலர் ஆன்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து பேபி ஜான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, பேபி ஜான் படம் தெறி படத்தின் ரீமேக் படமாக இருந்தாலும் இந்தி பதிப்புக்காக பல மாற்றங்கள் இந்த படத்தில் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தெறி படத்தில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். என்றாலும் அவரது கேரக்டரை நான் துணிச்சலாக ஏற்று நடத்தேன். அவரைப் போன்று நம்மால் நடிக்க முடியுமா என்று நான் பயப்படவில்லை. அப்படி நடித்ததன் காரணமாக இப்போது பேபி ஜான் படத்தில் என்னுடைய கேரக்டரும் மிகச் சிறப்பாக வந்துள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்