தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சீசனின் போட்டியாளராக கலந்துக்கொண்டவர். லியோ படத்தில் சாண்டி மாஸ்டர் வில்லன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. மலையாளத்தில் வெளியான லோகா படத்திலும் சாண்டி மாஸ்டர் பிரதான கேரக்டரில் நடித்திருந்தார்.
சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி பெயர் காஜல் பசுபதி. கடந்த 2008ம் ஆண்டில் சாண்டி – காஜல் திருமணம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2012ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பிறகு 2017ம் ஆண்டில் சாண்டி மாஸ்டர் டொரதி சில்வியா என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால் காஜல் பசுபதி 2வது திருமணம் செய்துக்கொண்டதாக தெரியவில்லை. இவரும் ஒருமுறை விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் ஒரு திரைப்பட நடிகை தான். கோ கலகலப்பு 2 மௌன குரு கதம் கதம் கள்வனின் காதலி பெருமாள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை காஜல் கூறியதாவது, ரசிகர்கள் கெட்டுப் போக காரணமே விஜய்தான். ரஜினி கமல் விஜய் இந்த 3 பேரும்தான் இதற்கு காரணம். இவர்களுடன் ஒப்பிடும் போது அஜீத்குமார் நல்ல மனிதராக தெரிகிறார். என்ன மனுசன்யா என்று பாராட்ட தோன்றுகிறது. கடைசி வரை ஒரே மனைவியுடன் இருந்து எப்போதுமே அவரது மனைவி ஷாலினி சிரித்த முகத்துடன் இருக்கிறார்.
அஜீத்குமார் தனது ரசிகர்கள் தப்பு செய்தால் அதே இடத்தில் திட்டுவார். ரசிகர்களை கோபமாக கண்டிப்பார். அவர்களை என்கரேஜ் செய்ய மாட்டார். ஆனால் விஜய் போன்றவர்கள் ரசிகர்களை என்கரேஜ் செய்கின்றனர். இந்த ரசிகர்கள் கெட்டுப் போறதுக்கு காரணமே விஜய்தான். முதலில் ரசிகர்கள் தான் விஜய் பெயரை கெடுக்கின்றனர் என்று யோசித்தேன். ஆனால் ரசிகர்கள் கெட்டுப் போறதுக்கு காரணமே விஜய்தான்.
ஏன் அஜீத் மாதிரி மண்டையில் விஜய்க்கு கொட்ட தெரியாதா? ரசிகர்களை எங்க வைக்கணும்? அவர்களுக்கு எப்படி பாடம் புகுத்தணும்? முதலில் நீங்க உங்க ரசிகர்களை சரி பண்ணுங்க. அப்புறம் ஆட்சி பண்ண கத்துக்கோங்க. அப்புறமா தமிழ்நாட்டை ஆளலாம். முதலில் உங்க ரசிகர்களை ஆள கத்துக்கோங்க என்று நடிகை காஜல் பசுபதி பேசியிருக்கிறார்.





