- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு நான் ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன், அதை மட்டும் பண்ணுங்க, உங்களுக்கு நல்ல பேர்...

விஜய்க்கு நான் ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன், அதை மட்டும் பண்ணுங்க, உங்களுக்கு நல்ல பேர் கிடைச்சிடும் – நக்கலாக பேசிய நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளராக சமீபகாலமாக மாறிவிட்டார். தொடர்ந்து திமுக மேடைகளில் அவர் பேசி வருகிறார். அதுவும் தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சிக்கிறார். கொளத்தூரில் தலைவர் ஸ்டாலினை தோற்கடித்து விட்டார்களே என அவர் மேடையில் அழுதது இணையத்தில் வைரலாகி விட்டது.

சத்யராஜின் மகள் திவ்யா கடந்த ஆண்டில் திமுக கட்சியில் இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்பும் அங்கு தரப்பட்டது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் விருப்ப மனுவும் அளித்திருந்தார். ஆனால் திமுக தலைமை அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.

- Advertisement -

எனினும் சத்யராஜ் தொடர்ந்து திமுக விசுவாசியாக இருந்து வருகிறார். இதற்கிடையே நடிகர் சத்யராஜின் மகன் தீவிர விஜய் ரசிகராக இருந்து வருகிறார். விஜயை சத்யராஜ் தாறுமாறாக விமர்சிக்கும் அதே வேளையில் தனது வலைதள பக்கத்தில் விஜயை புகழ்ந்து பதிவிடுவதை சிபிராஜ் தொடர்ந்து செய்து வருவதும் ரசிகர்களிடயே ஆச்சரியத்தை தந்துள்ளது.

தந்தை சத்யராஜ் ஒரு புறம் முதல்வர் விஜய்க்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வரும் அதே வேளையில் அவரது மகன் சிபிராஜ் மறுபுறம் விஜய்க்கும் தவெக கட்சிக்கும் ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆடு பகை குட்டி உறவா என்று இந்த சர்ச்சையான விஷயம் குறித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, இப்போது ஆட்சியில் இருக்கறவங்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் நான் சொல்றேன். நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டாம். ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களுக்கு வேறு பெயர்களை மாற்றி ஸ்டிக்கரை மாற்றி அப்படியே அதை செயல்படுத்துங்கள்.

உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும். நான் முதல்வன் திட்டமா வேறு பெயர் வைங்க. விடியல் பயணமா வேற பெயர் வைங்க. பெயரை மட்டும் மாத்தினாலே உங்களுக்கு நல்ல பேர் வந்துடும். ஆனால் ஸ்டாலின் கொண்டு வந்த நலத்திட்டங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் மாத்தினீங்கன்னா அது சரிபட்டு வராது என்று சத்யராஜ் அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்