- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளேன், சென்னையில் நிம்மதியாக வாழ முடியாது - நடிகர்...

அந்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளேன், சென்னையில் நிம்மதியாக வாழ முடியாது – நடிகர் விஜய் ஆண்டனி ஓபன்டாக்!

- Advertisement -

இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த நூறு சாமி படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வருகிற 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து விஜய் ஆண்டனி கூறியதாவது, என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் சசி. பிச்சைக்காரன் படத்தின் மூலம் இன்னும் பெரிய நடிகராகவும் என்னை மாற்றினார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் சசி இருக்கிறார். அவரின் பார்வை கதை சொல்லும் விதம் புதிதாக உள்ளது. பிச்சைக்காரன் படம் பார்த்தவர்கள் தங்களது அம்மாவை கொண்டாடினார்கள். இந்த படத்தை பார்த்தால் பெண்களைப் பற்றி அவர்களின் இன்னொரு வாழ்க்கை உலகம் பற்றி ஆண்கள் யோசிப்பார்கள். அம்மாவாக சுவாசிகா மகனாக என் மருமகன் அஜய் திஷன் நடித்துள்ளனர்.

- Advertisement -

படத்தில் நான் குறைவான நேரம் வந்தாலும் நிறைவான கேரக்டர். கரும்பு வெட்டும் தொழிலாளியாக வருகிறேன். இந்த படத்துக்காக மருமகன் அஜய்க்கு சம்பளம் கொடுக்கவில்லை. இன்னும் சில படங்களில் எங்கள் கம்பெனிக்காக அவர் நடிக்கப் போகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் நான் சம்பளம் வாங்கினேன். அப்படி வாங்கிய முதல் ஹீரோ நான்தான். இது நல்ல விஷயம்.

இப்போது சொந்த படங்களில் நடித்து வருகிறேன். முதல்வர் விஜயை சமீபத்தில் சந்தித்தேன். ஒன்றிரண்டு விஷயங்கள் தவிர வேறு அதிகமாக பேசவில்லை. அவருக்கு வாழ்த்துகள் சொன்னேன். தற்போதைய சூழலில் இளைஞர்கள் அதிக அரசியல் ஆர்வம் கொண்டுள்ளனர். அடுத்து கோடியில் ஒருவன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.

- Advertisement -

சினிமா இசை என தொழில் இங்குள்ளது என்பதால்தான் நான் சென்னையில் இருக்கிறேன். எனக்கு பிடித்தது எளிமையான வாழ்க்கை முறைதான். கிராமத்தில் 7 மணிக்கு மேல் மக்கள் உறங்குவது இல்லை. அதிகாலையில் கோழி கூவும் முன்பு எழுந்திருப்பது தான் பிடித்துள்ளது. 3 ஆண்டுகள் கழித்து பொள்ளாச்சி போன்ற ஒரு கிராமப் பகுதியில் செட்டில் ஆகிவிடலாம் என திட்டமிட்டு இருக்கிறேன்.

ஒரு நல்ல கிராமம் பார்த்து அதற்கான திட்டம் உள்ளது. நகரத்தில் உள்ளவர்கள் அழுத்தத்தோடு ஓடுகிறார்கள். கிராமப்புறத்தில் பரபரப்பு கிடையாது. மன அழுத்தம் கிடையாது. இன்னொரு கொரோனா வந்தால் சென்னையில் வாழ முடியாது. கிராமப்புற வாழ்க்கை மேம்பட்டு உள்ளது என புரிந்து கொள்ள வேண்டும். வேலைக்காக மட்டுமே சென்னையில் உள்ளோம். நான் நீங்கள் என அனைவரும் விரைவில் கிராமத்துக்கு சென்றுவிடலாம் என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறினார்.

- Advertisement -

சற்று முன்