- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டாராக இருந்தும் அந்த காட்சியில் இமேஜ் பார்க்காமல் நடித்த நடிகர் ரஜினிகாந்த் - அந்த...

சூப்பர் ஸ்டாராக இருந்தும் அந்த காட்சியில் இமேஜ் பார்க்காமல் நடித்த நடிகர் ரஜினிகாந்த் – அந்த காட்சியை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியுமா?

- Advertisement -

பொதுவாக சினிமா நடிகர்கள் குறிப்பாக நட்சத்திர ஹீரோக்கள் இமேஜ் பார்ப்பார்கள். அது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஏனெனில் சினிமாவை பொருத்த வரை இமேஜூம் மார்க்கெட்டும் இருக்கும் வரை தான் அவர்களது படங்கள் வெற்றிக்கரமாக ஓடும். தொடர்ந்து பிளாப் படங்கள் தந்தால் எந்த ஹீரோவாக இருந்தாலும் மார்க்கெட் சரிந்து விடும்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் கொடுத்து விட்டால் அடுத்து வருகிற 3 படங்களுக்கு அந்த ஒரு படமே தாங்கி பிடித்து விடும். அதாவது அடுத்தடுத்து 3 படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்த படம் ஹிட் கொடுத்தால் மீண்டும் பழைய இடத்துக்கே அந்த ஹீரோ வந்துவிடலாம் என்பதுதான் தமிழ் சினிமாவின் பார்மூலாவாக உள்ளது.

- Advertisement -

அதனால் நட்சத்திர ஹீரோ நடிகர்கள் தங்களது இமேஜ் டேமேஜ் ஆகும்படியான காட்சிகளில் நடிக்க மாட்டார்கள். குறிப்பாக மற்ற ஹீரோக்களை தூக்கி பிடித்து கொண்டாடுவது போன்ற காட்சிகளை முற்றிலும் தவிர்ப்பார்கள். அப்படி ஒரு காட்சி வைத்தால் இயக்குனரையே மாற்றுமாறு தயாரிப்பாளரிடம் கூறி விடுவார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் அதற்கு நேர்மாறானவர். இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு குஷ்பு நடித்த படம் சின்னதம்பி. இது பிளாக்பஸ்டர் வெற்றி படமாக இருந்தது. இதைத் தொடர்ந்து இயக்குனர் பி வாசு இயக்கிய படம் மன்னன். ரஜினிகாந்த் விஜயசாந்தி குஷ்பு கவுண்டமணி விசு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

- Advertisement -

விஜயசாந்திக்கு சொந்தமான பேக்டரியில் வேலை செய்யும் ரஜினியும் கவுண்டமணியும் சின்னதம்பி படம் பார்க்க முதலில் டிக்கெட் வாங்கும் 2 ரசிகர்களுக்கு தங்க செயின் மோதிரம் பரிசாக தருவதாக கூறியதால், விஜயசாந்தியிடம் பொய் சொல்லிவிட்டு அந்த படத்தை பார்க்க செல்வார்கள். ரஜினியும் கவுண்டமணியும் டிக்கெட் கவுண்டரில் அடித்து பிடித்து அந்த முதல் டிக்கெட்டுகளை வாங்கி விடுவார்கள்.

தியேட்டருக்குள் சென்றால் அந்த ரசிகர்களுக்கு பரிசு வழங்க விஜயசாந்தியே சிறப்பு விருந்தினராக வந்திருப்பார். அதை பார்த்து ரஜினியும் கவுண்டமணியும் வெலவெலத்து போவது போல இந்த காமெடி காட்சி எடுக்கப்பட்டிருக்கும். ரஜினியுடன் ஒப்பிடும் போது பிரபு சின்ன நடிகர்தான். ஆனால் அவரது படத்தை பார்க்க ரஜினி செல்வது போன்ற இந்த காட்சியில் எந்த இமேஜூம் பார்க்காமல் நடித்து கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்