தமிழ் சினிமாவில் மிக பிரபலமான டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் கலா மாஸ்டர். இவரது சகோதரி பிருந்தாவும் டான்ஸ் மாஸ்டர். அன்று முதல் இன்று பல முன்னணி நடிகர், நடிகைகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நடிகர், நடிகையர் பலரும் நடனப் பயிற்சி கற்று வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அம்பிகா, ராதா, குஷ்பு, மீனா, விமான விபத்தில் இறந்த நடிகை சவுந்தர்யா என பலரும் இவரது நெருங்கிய தோழிகள். கடந்தாண்டு, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் இறந்த போது, மீனாவுக்கு பக்கபலமாய் இருந்து ஆறுதல் சொன்னவர் கலா மாஸ்டர். அந்த நாட்களில் மீனாவுடனே இருந்து அவரை தேற்றியவர், இப்போதும் அவருக்கு முக்கிய ஆலோசகராக இருந்து வருகிறார்.
அது மட்டுமின்றி, கலா மாஸ்டர் டிவி சேனல்களில் நடத்தப்படும் நடன போட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இதில் அவர் பேசும் பஞ்ச் டயலாக், கிழி கிழின்னு கிழிச்சுட்டே என்ற டயலாக் டிரெண்டிங் ஆகிவிட்டது. இவரது தங்கை பிருந்தாவும், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்து வருகிறார். கமல் நடித்த நம்மவர் படத்தில் பிருந்தா, நாகேஷின் மகளாகவும் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் கலா மாஸ்டர் ஒரு நேர்காணலில் பேசி இருந்தார். அப்போது, இவர் நைட்டோடு நைட்டாக என் வீட்டுக்கு வந்தார். இவர் வந்த பிறகுதான், எனக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தது என்று கூறினார். அவர் கூறியது, அவர் வீட்டு பூஜை அறையில் இருக்கும் கருங்காலி விநாயகரை தான்.
தினமும் இவருக்கு பூஜை செய்வேன். என்னை நல்ல முறையில் மக்களுக்கு அடையாளப்படுத்திய இவருக்கு நன்றி சொல்வேன். என்னிடம் யாராவது மனக்குறை, மனக்கஷ்டத்தை சொன்னால், உடனடியாக வீட்டுக்கு வரச்சொல்லி, கருங்காலி விநாயகரை வழிபடச் செய்வேன். அப்போதே அவர்களது கஷ்டங்கள் மறைந்துவிடும்.
எனக்கு கோபம் வந்தால், கருங்காலி விநாயகரை திட்டுவேன், சண்டை போடுவேன். கடந்த 2003ம் ஆண்டில் இவர், என் வீட்டுக்கு நைட்டோடு நைட்டாக வந்தார். அன்று முதல், 20 ஆண்டுகளாக இவர் எங்கள் வீட்டில் ஒருவராகவே மாறி விட்டார் என, பக்தி பரவசத்துடன் கருங்காலி விநாயகரை வழிபட்டபடி கூறியிருக்கிறார் கலா மாஸ்டர்.





