- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கிய ரஜினிகாந்த் படத்தில் முதலில் அந்த கேரக்டரில் நடிக்க இருந்தது நான்தான் - 35...

மணிரத்னம் இயக்கிய ரஜினிகாந்த் படத்தில் முதலில் அந்த கேரக்டரில் நடிக்க இருந்தது நான்தான் – 35 ஆண்டுகளுக்கு பின் நடிகர் ஜெயராம் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான படம் தளபதி. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வெற்றிப் படமாக இன்றும் கொண்டாடப்படுகிறது தமிழ் சினிமா படங்களில் ஒரு முக்கியமான படைப்பாகவும் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்து நடித்த தளபதி படம் என்றும் நட்புக்கான இலக்கணம் சொல்லும் ஒரு படமாக பேசப்படுகிறது. இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படம் மூலம் தான் நடிகர் அரவிந்த்சாமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

தளபதி படத்தில் கலெக்டர் கேரக்டரில் கம்பீரமாகவும் ரஜினியின் தம்பியாகவும் உணர்வுபூர்வமாக நடிப்பை வெளிப்படுத்திய அரவிந்த்சாமி தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இந்த படத்துக்கு பிறகு தான் அரவிந்தசாமி ரோஜா பம்பாய் போன்ற படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெயராம் தளபதி படத்தில் அரவிந்த்சாமி நடித்த கேரக்டர் குறித்து கூறியதாவது, தளபதி படத்தில் அரவிந்தசாமி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். அந்த வாய்ப்பு குறித்து முதலில் என்னிடம் பேசியவர் மம்முட்டிதான். தொடர்ந்து மூன்று மாதங்கள் அந்த படத்துக்கு என்னுடைய கால்ஷீட் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது மலையாள திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நான் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டியுடன் பல முக்கிய காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு அந்த படத்தில் எனக்கு இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தேதிகள் ஒத்துவராததால் அந்த நல்ல வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். அதன்பின்பு தான் அந்த கேரக்டரில் நடிகர் அரவிந்தசாமி நடித்தார்.

தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது இன்றும் கூட எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது என்று நடிகர் ஜெயராம் வெளிப்படையாக கூறியிருக்கிறார். நடிகர் ஜெயராம் கூறிய இந்த புதிய தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி படத்தில் அரவிந்த்சாமி கேரக்டரில் ஜெயராம் நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்று ரசிகர்கள் பலரும் இப்போது சமூக வலைதளங்களில் விவாதிக்கவும் தொடங்கிவிட்டனர்.

- Advertisement -

சற்று முன்