சினிமாவை பொருத்தவரை நடிகர் இயக்குனராகிறார், இயக்குனர் நடிகராகிறார். நடிகைகள் டைரக்டர்களாக மாறுகின்றனர். பாடகர்கள், நடிகர்களாகின்றனர். நடிகர்கள் பாடகர் ஆகின்றனர். நடிகர்கள் தயாரிப்பாளராகின்றனர். காமெடி நடிகர்கள் ஹீரோவாகின்றனர். பிறகு டைரக்ட் செய்யவும் வந்து விடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் இப்படி பல விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவே செய்கின்றனர். காமெடி நடிகர் சந்தானம், ஹீரோவாக நடித்தார். இப்போது ஒரு படம் இயக்க தயாராகி வருகிறார். காமெடி நடிகர் ரோபோ சங்கர், இப்போது ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோவாக நடித்து வரும் காமெடி நடிகர் சூரி, இப்போது அவரது அப்பா, அம்மா கதையை படமாக இயக்கப் போகிறேன் என்கிறார்.
சில நேரங்களில் நடிகர்கள், இயக்குனர்கள் எடுக்கும் இதுபோன்ற முடிவுகள் வெற்றியை தந்திருக்கின்றன. பல நேரங்களில் பலத்த தோல்விகளை தந்திருக்கின்றன. ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்ற ஒரு நம்பிக்கையில்தான் இதுபோன்ற விஷ பரீட்சைகளிலும் அவர்கள் இறங்குகின்றனர். அதே நேரத்தில் சிலர் பெரிய வெற்றியையும் பெறுகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் முத்துராஜ், இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார். ஷங்கர் இயக்கிய 2.0 அட்லி இயக்கிய பிகில் ஜவான் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிசெய்தவர் முத்துராஜ்.
ஒளிப்பதிவாளர் முத்துராஜ் பெரும்பாலும் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்களின் படங்களில்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்ற கமிட் செய்யப்படுவார். ஏனெனில் அவரும் ஒரு ஸ்டார் வேல்யூ உள்ள பிரபல முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார். ஒரு ஆண்டு, 2 ஆண்டுகள் என ஒரு படத்தில் பணியாற்ற முத்துராஜ் கமிட் செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் முத்துராஜ், இயக்குனராக முடிவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குனராக அவர் டைரக்ட் செய்யப் போகிற முதல் படம் குழந்தைகளை பற்றியது. குழந்தைகளை பற்றிய ஒரு படத்தை இயக்குவதில் ஆத்ம திருப்தி கிடைக்கும் என்பதால், இப்படி ஒரு முடிவை எடுத்து இயக்குனராக களம் இறங்குகிறார் ஒளிப்பதிவாளர் முத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.





