நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சமீபத்தில் மக்கள் மேடை என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதில் மக்கள் சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவார் என்று பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை என்கிற புதிய இயக்கம் ஆரம்பித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து தமிழகத்தின் முதல்வராகி விட்டார். கமல் கட்சி ஆரம்பித்து ராஜ்யசபா எம்பியாக வலம் வருகிறார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து எதிர்கட்சி தலைவராக இருந்தார். நடிகர்கள் சரத்குமார் ராமராஜன் நெப்போலியன் ராதாரவி என பலரும் அரசியல் களத்தில் பிரபலமடைந்தனர்.
ஆனால் ரஜினிகாந்த் மட்டும் அரசியலுக்குள் வராமல் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லியே காலத்தை ஓட்டி விட்டார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த விரக்தியில் உள்ளனர். இப்போது ரஜினிக்கு 75 வயதான நிலையில் இனி வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன என்று கவுண்டமணி டயலாக் மாதிரி தான் மன உளைச்சலில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகன், அதாவது ரஜினி லதா தம்பதியின் சின்ன மருமகன் விசாகன், மிக விரைவில் அண்ணாமலை துவங்க உள்ள கட்சியில் இணையப் போவதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இது 100 சதவீதம் உண்மை என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலை துவங்கும் அரசியல் கட்சிக்கு ரஜினிகாந்த் வெளிப்படையாக ஆதரவு தரப்போகிறார் என்று சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. இந்த சூழலில் ரஜினி குடும்பத்தில் இருந்து அவரது சின்ன மருமகன் விசாகன், அண்ணாமலையுடன் கைகோர்ப்பது ரஜினியின் ஆலோசனைப்படி தான் என்றும் கூறப்படுகிறது. அதனால் அண்ணாமலை – ரஜினி இணைந்து ஒரு புதிய அரசியல் களம் தமிழ்நாட்டில் உருவாகும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.





