- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பாக்கியை வைச்சு ஷூட் பண்ணிடுவேன்- பத்திரிக்கையாளரை பகிரங்கமாக மிரட்டிய ராதிகா, ஏன் இப்படி பொசுக்குன்னு கோபப்பட்டாங்க?

துப்பாக்கியை வைச்சு ஷூட் பண்ணிடுவேன்- பத்திரிக்கையாளரை பகிரங்கமாக மிரட்டிய ராதிகா, ஏன் இப்படி பொசுக்குன்னு கோபப்பட்டாங்க?

- Advertisement -

1970களில் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த ராதிகா சரத்குமார், நடிக்க வந்த புதிதிலேயே முன்னணி நடிகையாக உருவானார். அவரது மாநிறமும், வெள்ளந்தியான முகமும் ரசிகர்கள் பலரையும் ஈர்த்தது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்த ராதிகா சரத்குமார், ஹீரோயின் மார்க்கெட் போன பிறகு “சித்தி”, “அண்ணாமலை” ஆகிய சீரியல்களில் நடித்து தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாது பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் ராதிகா. குறிப்பாக “ஜீன்ஸ்” திரைப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதே போல், “தர்மதுரை” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தாயாராக மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, “நானும் ரவுடிதான்”, “வானம் கொட்டட்டும்”, “யானை”, “வெந்து தணிந்தது காடு”, “லவ் டூடே” போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்த ராதிகா, தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

ராதிகா சிறந்த நடிகை மட்டுமல்லாது, மிகவும் தைரியமாக பேசக்கூடியவரும் கூட. தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடக்கூடிய குணம் படைத்தவர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, ராதிகா சரத்குமார் தன்னை சுட்டுவிடுவதாக மிரட்டிய சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது செய்யாறு பாலு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தாராம். அப்போது அவர் ராதிகாவை ஒரு பேட்டி எடுத்திருந்தாராம். அந்த பேட்டியை பதிவு செய்து பத்திரிக்கை ஆஃபீஸில் கொடுத்துவிட்டாராம். அவர்களோ சுவாரஸ்யத்திற்காக சில விஷயங்களை சேர்த்து விவகாரமான தலைப்பை வைத்து அந்த பேட்டியை வெளியிட்டுவிட்டார்களாம்.

அந்த பேட்டியை பார்த்தவுடன் ராதிகா, செய்யாறு பாலுவிற்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “என்ன இந்த மாதிரி தலைப்பு வச்சிருக்கீங்க?” என கோபமாக கேட்டாராம். அதற்கு செய்யாறு பாலு, “நான் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள்தான் அப்படி தலைப்பு வைத்து வெளியிட்டுவிட்டார்கள்” என்று கூறினாராம்.

அதற்கு ராதிகா, “ஆனா பேட்டி எடுத்தது நீதானய்யா” என்று திட்டிவிட்டு, “உன்னை ஷூட் பண்ணிடுவேன்” என மிரட்டினாராம். அதற்கு செய்யாறு பாலு, “எம்.ஆர்.ராதாவோட மகள் கையால் நான் சாவதை பெருமையாக நினைக்கிறேன்” என்று கூறினாராம். செய்யாறு பாலு அப்படி கூறியதும் ராதிகா சரத்குமாருக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டதாம். உடனே ஃபோனை கட் செய்துவிட்டாராம்.

- Advertisement -

சற்று முன்