தமிழ் சினிமா மூலம் நமது கிராமங்களின் வாழ்வியல் பெருமைகளை உலகறிய செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவர் தனது 84வது வயதில் நேற்று காலை சென்னையில் இயற்கை எய்தினார். தமிழ் சினிமாவின் பொற்காலமே முடிவடைந்து விட்டது என தமிழ் சினிமாத்துறையும் ரசிகர்களும் வருந்துகிற சூழ்நிலையில் கலங்கிப் போயுள்ளது. இந்த நிலையில் பாரதிராஜா வாழ்வில் நடந்த ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதையே அவர் வேண்டாம் என்று திருப்பித் தந்துள்ளார்.
தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பிறந்த சின்னசாமி தான். பின்னாளில் பாரதிராஜாவாக தமிழ் சினிமாவின் அடையாளமாக உயர்ந்தார். 1977ம் ஆண்டில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த ஒரு திரைப்படமே தமிழ் சினிமாவின் கதை சொல்லும் முறையை மாற்றி அமைத்தது. அதன்பிறகு கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் அலைகள் ஓய்வதில்லை மண்வாசனை முதல் மரியாதை வேதம் புதிது கருத்தம்மா உள்ளிட்ட பல படைப்புகளை தந்தார்.
நடிகர்கள் கார்த்திக் பாண்டியன் கே பாக்யராஜ் நெப்போலியன் மனோபாலா சீமான் சித்ரா லட்சுமணன் நடிகைகள் ரஞ்சிதா சுகன்யா பிரியாமணி விஜயசாந்தி ரேவதி ராதா ரேகா ராதிகா பலர் திரைக்கு வர காரணமே பாரதிராஜா தான். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனித்துவமான முத்திரை பதித்த அவர் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல விருதுகளை பெற்றார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பாரதிராஜான் மகன் நடிகர் மனோஜ் திடீரென மறைந்தார். அன்பு மகனின் இழப்பால் பலத்த வேதனையுடன் புத்திர சோகத்தில் வாழ்ந்து வந்த பாரதிராஜா இறுதி வரை சினிமா மீதான தனது காதலை மட்டும் கைவிடவில்லை. பாரதிராஜா திரையுலகின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழர்களுக்கான தனித்துவமான சங்கங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டார்.
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழர்களின் உரிமையை நிலை நாட்ட பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். இலங்கை தமிழர்கள் விடுதலைப் போராட்டத்திற்கும் புலிகளுக்கும் இவர் வெளிப்படையான ஆதரவை வழங்கி இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை போர் சமயத்தில், தனக்கு வழங்கப்பட்டிருந்த இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை எனக்கு வேண்டாம் என திருப்பி அளித்தவர் பாரதிராஜா.
அதனால் அவருக்கு இலங்கை தமிழர்களின் ஆதரவும் அதிகமாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனது மக்கள் இன உணர்வுக்காக பத்மஸ்ரீ விருதையே திருப்பித் தந்த பெருமைக்குரிய ஒரு சிறந்த மனிதர்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலகுண்டு கிராமத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.





