- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படம், தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி ஆசை நிறைவேறலே...

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 100வது படம், தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி ஆசை நிறைவேறலே – இளைய மகன் ஜீவா எடுத்த அதிரடி முடிவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி. அவரது மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா இருவரும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி மறைந்து விட்டார்.

இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தை நடிகர் ஜீவா தனது பொறுப்பில் கவனித்து வருகிறார். தந்தை இடத்தில் இருந்து அவரே இனி படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் உள்ளார். இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் மகுடம். நடிகர் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்.

- Advertisement -

மகுடம் 99வது படம் என்ற நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் அடுத்து 100வது படத்தை தயாரிக்க உள்ளார். ஆனால் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி நடிகர் விஜய் நடிக்கும் படத்தை 100வது படமாக தயாரிக்க விரும்பினார். ஆனால் விஜய் முதல்வராகி விட்டதால் அவரது ஆசை நிறைவேற வாய்ப்பின்றி போய்விட்டது.

இந்த நிலையில் நடிகர் ஜீவா சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தை தயாரிக்க தயாராகி விட்டார். ஜீவா நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் டிடிடி. தலைவர் தம்பி தலைமையில் என்ற இந்த படம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து சூப்பர் கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

இப்போது அந்த டிடிடி படத்தின் 2ம் பாகத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக ஜீவா தயாரித்து அவரே நடிக்கவும் உள்ளார். இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் அந்த படம் 2ம் பாகமாக பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளது. அந்த படத்தில் நடித்த தம்பி இராமையா இளவரசு பிரத்னா ஜென்சன் திவாகர் உள்ளிட்ட மீண்டும் இந்த படத்திலும் நடிக்க உள்ளனர்.

இந்த டிடிடி 2ம் பாகத்துக்கான ஸ்டோரி டிஸ்கசன் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் டிடிடி படத்தின் முதல் பாகத்தை தயாரித்தவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி. அதனால் அவரிடம் என்ஓசி சான்று பெற்ற பிறகே இந்த படத்தை நடிகர் ஜீவா தனது சொந்த நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க முடியும். அல்லது அவரையும் இணை தயாரிப்பாளராக சேர்த்து இந்த படத்தை தயாரிக்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்