முன்னாள் திரைப்பட நடிகர் இன்றைய முதல்வர் விஜய், இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் மகன். அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் ஒரு திரைப்பட பாடகி. அவரது தாய்மாமா அதாவது ஷோபாவின் சகோதரர் எஸ்என் சுரேந்தர் ஒரு திரைப்பட பாடகர். அத்துடன் அவர் ஒரு டப்பிங் கலைஞர். நடிகர் மோகனின் குரலாக திரைப்படங்களில் ஒலித்தது எஸ்என் சுரேந்தர் குரல்தான்.
நடிகர் விஜய் நடிப்பது மட்டுமின்றி தனது அம்மா மாமாவை போல ஏராளமான பாடல்களை தனது படங்களில் பாடியிருக்கிறார். அவரது அம்மாவுடன் இணைந்தும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதுதான் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா என்ற பாடல். அதுமட்டுமின்றி விஜய் தனது சொந்த குரலில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி வாடி வாடி வாடி கைபடாத சிடி கண்டாங்கி கண்டாங்கி கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் செல்பி புள்ள வாங்கண்ணா வணக்கங்கண்ணா என பாடல்களை விஜய் சொந்த குரலில் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் விஜய் நடித்த படங்களில், இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பது உங்கள் விஜய் என்று எழுத்துகளே வந்துவிடும்.
மேலும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்துடன் நடிகர் சூர்யா நடித்த படம் பெரியண்ணா. இந்த படத்தில் நான் கண்ணடிக்கிற ஸ்டைலை பார்த்து என்று சூர்யா பாடும் ஒரு பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். இந்த பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. அத்துடன் மற்றொரு நடிகருக்கும் விஜய் பாடியிருக்கிறார்.
நடிகர் சூர்யாவுக்காக மட்டுமின்றி நடிகர் விக்னேஷ்க்காகவும் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.கடந்த 1998ம் ஆண்டில் நடிகர் விக்னேஷ் ஹீரோவாக நடித்த படம் வேலை. இந்த படத்தின் இயக்குனர் ஜே சுரேஷ். இந்த படத்துக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் நடிகர் விஜய் நடிகர் விக்னேஷ்க்காக குரல் கொடுத்து யுவன் இசையில் பாடிய பாடல்தான் அது. காலத்துக்கு ஏற்ற ஒரு கானா என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விக்னேஷ் கூறியதாவது, லியோ படத்தில் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்ற நான் நடித்த பாடல் காட்சியில் விஜய் நடனமாடி பாடி நடித்திருந்தார். அதே போல் நான் நடித்த வேலை என்ற படத்துக்காகவும் விஜய் எனக்கு பாட்டு பாடியிருக்கிறார். சூர்யாவுக்கும் எனக்கும் மட்டுமே விஜய் இப்படி 2 பாடல்களை பாடியிருக்கிறார். இப்போது நான் 3 கே என்ற படத்தில் நடித்து வருகிறேன். இது கனவு காதல் கல்யாணம் அதுதான் 3 கே என்று நடிகர் விக்னேஷ் கூறியிருக்கிறார்.





