- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசன் படத்தின் ஒரு மணிநேரம் புட்டேஜ் பார்த்த ஹீரோ சிலம்பரசன் - டைரக்டர் வெற்றிமாறனிடம் உடனே...

அரசன் படத்தின் ஒரு மணிநேரம் புட்டேஜ் பார்த்த ஹீரோ சிலம்பரசன் – டைரக்டர் வெற்றிமாறனிடம் உடனே சொன்னது என்ன தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து முடிந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் இப்போது 3ம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.

தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கிறார். மேலும் பிரியங்கா மோகன் ஆண்ட்ரியா அமீர் யோகலட்சுமி விஜய் சேதுபதி சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அரசன் படத்தின் ஒரு மணி நேரம் புட்டேஜ் காட்சிகளை டைரக்டர் வெற்றிமாறன் படத்தின் ஹீரோ சிலம்பரசனுக்கு போட்டு காட்டியிருக்கிறார். அந்த ஒரு மணி நேர காட்சிகளை பார்த்து சிலம்பரசன் அப்படியே அசந்து போய் விட்டார் என்று சொல்லப்படுகிறது.

படத்தின் சம்பவங்களும் காட்சிகளும் பெரிய அளவில் சிலம்பரசனுக்கு வியப்பை தந்திருக்கிறது. அந்த காட்சிகளை பார்த்து மிரண்டு போன நடிகர் சிலம்பரசன், படம் வேற லெவலில் உள்ளது. நான் இதுவரை நடித்த படங்களிலேயே எனக்கு பெரிய பெயரை தரும் ஒரு படமாக இதுதான் இருக்கும் என்று வெற்றிமாறனை பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்துக்கு இவ்வளவு நாள்தான் கால்ஷீட் என்ற கட்டுப்பாடு இனி இல்லை. எத்தனை நாள் வேண்டுமானாலும் நடிக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று சந்தோஷமாக வெற்றிமாறனுக்கு உறுதிமொழியும் சிம்பு தந்திருக்கிறார்.

மேலும் இந்த படம் குறித்து நடிகர் சிம்பு, அனிருத்துக்கும் தகவல் சொல்லியிருக்கிறார். அவரும் அந்த ஒரு மணி நேர புட்டேஜ் காட்சிகளை பார்த்து அசந்து போயிருக்கிறார். உடனே தனது நெருங்கிய நண்பர் இயக்குனர் நெல்சனை அழைத்து, அரசன் படம் குறித்து மிகவும் பெருமிதமாக அனிருத் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்