தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே நல்ல கதாபாத்திரங்களை வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். வித்யாசமான ஜானரில் அவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களை ரசிக்க வைக்கின்றன.
அந்த வரிசையில் தெகிடி சூது கவ்வும் ஓ மை கடவுளே நித்தம் ஒரு வானம் போர்த்தொழில் சபாநாயகன் ப்ளு ஸ்டார் என அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றுமே வேறு விதமான கதைக்களங்களில் உருவானவை. பொன்னியின் செல்வன் படத்திலும் அவர் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
ஆனால் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், நடிகர் அசோக் செல்வன் இனி ஆக்சன் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். அதனால் ஆக்சன் கதை சொன்னால் மட்டுமே அதில் நடிப்பேன் என்று இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.
ஒரு ஹீரோ வித்யாசமான பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தாலும் எப்போது அதிரடி சண்டை காட்சி படங்களில் நடிக்கிறாரோ அப்போதுதான் அவர் மீது ரசிகர்களின் கவனம் அதிகரிக்கிறது. ஒரு ஹீரோயிசம் அவர் மீது ஏற்பட்டு அவருக்கான ரசிகர்கள் உருவாகின்றனர்.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படங்கள் கமர்ஷியலாக பெரிய வெற்றியை பெறுகிறது. அதன்மூலம் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்களின் சம்பளமும் பலமடங்கு கணிசமாக உயர்ந்து விடுகிறது. அந்த அடிப்படையில் இனி ஆக்சன் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அசோக் செல்வன் அடம்பிடித்து வருகிறார்.
இதனால் நல்ல நல்ல கதைகளை எல்லாம் அவர் புறக்கணிப்பதாகவும் தெரிகிறது. ஆக்சன் ஹீரோவாக மட்டுமின்றி நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதும் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுத் தரும். ஆக்சனை நம்பி நல்ல பட வாய்ப்புகளை தவிர்த்தால் அதுவே எதிர்காலத்தில் பெரிய பாதிப்பை தந்துவிடும். இது சரியாக வருமா என்பதை அசோக் செல்வன் புரிந்து செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





