- Advertisement -
Homeபொழுதுபோக்குகவிஞர் கண்ணதாசனை அப்படி செய்துவிடலாமா? உங்களுக்கு வருத்தம் இல்லையே? - கவிஞர் வாலியிடம் கருத்து கேட்ட...

கவிஞர் கண்ணதாசனை அப்படி செய்துவிடலாமா? உங்களுக்கு வருத்தம் இல்லையே? – கவிஞர் வாலியிடம் கருத்து கேட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர்!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வாலி ஒரு நேர்காணலில் கூறியதாவது, இது 1978ம் ஆண்டில் நடந்த சம்பவம். எம்ஜிஆர் அப்போது தமிழக முதல்வராக இருந்தார். நானும் அவரும் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக காரில் ஒன்றாக போய்க்கொண்டு இருந்தோம். பின்சீட்டில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டே பயணித்தோம்.

அப்போது எம்ஜிஆர், நான் உங்களிடம் ஒரு சமாச்சாரம் சொல்லப் போகிறேன். அதில் உங்களுக்கு மன வருத்தம் என்றால் என்னிடம் சொல்லிவிடுங்கள் என்று சொன்னார். என்ன என்று கேட்டேன். உங்களுக்கு ஃபீலிங் எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன் என்றார். என்ன அணணே நீங்க? எதற்கு இவ்வளவு பில்டப்? என்னான்னு சொல்லிடுங்க என்று கேட்டேன்.

- Advertisement -

கண்ணதாசனை அரசவை கவிஞராக நியமிக்கலாம் என்று இருக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க என்று கேட்டார். கை கொடுங்க அண்ணா எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அதை விட சந்தோஷமான சமாச்சாரமே கிடையாது. எனக்கு அவர் சீனியர் என்று எம்ஜிஆரிடம் மகிழ்ச்சியாக சொன்னேன்.

அப்போது ஒரே ஒரு திருத்தமும் நான் சொல்கிறேன். அவருடைய ஆயுள் வரையில் அவரே அரசவை கவிஞர் என்ற திருத்ததுடன் அதை செய்யுங்கள் என்றும் எம்ஜிஆரிடம் நான் சொன்னேன். எனக்கு இதில் ரொம்ப சந்தோஷம். இதுல என்ன ஒரு பெரிய பெருமை என்றால் எம்ஜிஆர் என் கைகளை பிடித்து ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.

- Advertisement -

உங்களுக்கு மிகவும் பெருந்தன்மை என்று பாராட்டினார். இதில் பெருந்தன்மை எல்லாம் எதுவும் இல்லை. அவர் என்னை விட பெரியவர். ஆறு வருஷம் சீனியர். என்ன ஒரு அற்புதம் நீங்கள் நிகழ்த்துகிறீர்கள் என்று சொல்லட்டுமா என்று கேட்டேன். எம்ஜிஆர் சொல்லுங்க என்றார்.

கண்ணதாசன் உங்களை விமர்சித்துக்கொண்டு இருந்தார். இப்போ அவரை தலைகீழா மாத்திட்டீங்க. கவி அரசை அரசு கவி ஆக்கிட்டீங்க என்றேன். எம்ஜிஆர் என்னை கட்டியணைத்து மகிழ்ச்சியடைந்தார் என்று கவிஞர் வாலி கூறியிருக்கிறார். சினிமாவில் சமகாலத்தில் கண்ணதாசன் வாலி இருவருமே பெரிய கவிஞர்கள் என்பதால் வாலியிடம் கருத்து கேட்ட ஒரு பண்பாளர் எம்ஜிஆர் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்