- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல சீனியர் நடிகருக்கு யுவ புரோஸ்கர் தேசிய விருது அறிவிப்பு - இவர் அற்புதமான நடிகராசச்சே...

பிரபல சீனியர் நடிகருக்கு யுவ புரோஸ்கர் தேசிய விருது அறிவிப்பு – இவர் அற்புதமான நடிகராசச்சே என வாழ்த்தும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் வாகை சந்திரசேகர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை வென்றவர். நண்பா நண்பா என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை அவர் பெற உள்ளார். தீவிர அரசியலிலும் ஈடுபட்டு திமுக சார்பில் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாகவும் வாகை சந்திரசேகர் பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மூத்த மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் வாகை சந்திரசேகர் இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கரகாட்டக்காரன் முதல் வசந்தம் சம்சாரம் அது மின்சாரம் ஊமை விழிகள் செந்தூரப்பூவே உட்பட ஏராளமான படங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியவர். வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

கடந்த 1956ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாகை மலர்களால் மாலை சூடும் வழக்கம் அப்போது இருந்தது. அந்த வெற்றியைக் குறிக்கும் விதமாகவே இவருக்கு வாகை என்ற பெயர் சூட்டப்பட்டதாக தெரிகிறது. வாகை சந்திரசேகர் சிறு வயது முதலே மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.

கடந்த 1980களில் தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் சில முக்கிய கதாபாத்திரங்களிலும் வாகை சந்திரசேகர் நடித்தார். அவரது நடிப்பை பாராட்டி கடந்த 1991ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் யுவ புரோஸ்கர் தேசிய விருது நடிகர் வாகை சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீதா நாடக அகாடமி விருது இந்தியாவின் இசை நடனம் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதாகும். இசை நடனம் நாடகம் பாரம்பரியம் நாட்டுப்புற கலைகள் மற்றும் பொம்மலாட்டம் கலைகளுக்கான ஒட்டுமொத்த பங்களிப்பு அல்லது ஆராய்ச்சி என 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் வாகை சந்திரசேகருக்கு யுவ புரோஸ்கர் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா நடிகராக மட்டுமின்றி அரசியல் களத்தில் திமுகவில் அவர் இருந்து வருகிறார். எனினும் அவரது அரசியல் கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சையாக இருந்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்