- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படம் மேக்கப் டெஸ்ட்டுக்கு நேரில் வந்த நடிகர் கமல்ஹாசன் - அவர் கையில்...

இந்தியன் 2 படம் மேக்கப் டெஸ்ட்டுக்கு நேரில் வந்த நடிகர் கமல்ஹாசன் – அவர் கையில் இருந்ததை பார்த்து ஆடிப்போன இயக்குனர் ஷங்கர்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்த படம் இந்தியன். கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் ஷங்கர், கடந்த 2024ம் ஆண்டில் இயக்கினார். மீண்டும் கமல்ஹாசன் நடித்த இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்தியன் 3 படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, இந்தியன் 2 படத்துக்காக படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு கமல் சாரை வைத்து ஒரு மேக்கப் டெஸ்ட் எடுத்தோம். கமல் எத்தனையோ ஆண்டுகள் நடிப்பு அனுபவம் கொண்ட ஒரு மூத்த நடிகர். சிறந்த கலைஞர்.

- Advertisement -

அவரை வைத்து மேக்கப் டெஸ்ட் எடுக்கும் போது அந்த இந்தியன் தாத்தா உடையை மாட்டி எடுப்போம். ஸ்டில்ஸ் எடுத்து வெச்சுப்போம் என்றுதான் அவரை மேக்கப் டெஸ்ட்டுக்கு வரச் சொன்னோம்.அப்படி மேக்கப் செய்து ஸ்டில் எடுக்கும் போது நம்ம காஸ்ட்யூமர் அவரது சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்ள பேனா எல்லாம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவரும் ஒரு 3 பேனாக்களை கையோடு எடுத்துட்டு வந்திருக்கிறார். அப்போ இது அந்த காலத்து பழைய பேனா. இப்பவும் எழுதும் இது சரியா இருக்கும் என்று கூறி பேனாவில் இருந்து இங்க் எல்லாம் தெளிச்சு காட்டியிருக்கிறார். இதை பார்த்ததும் நான் ரொம்பவும் அப்படியே ஆடிப்போயிட்டேன்.

- Advertisement -

நாளைக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்க போறோம். அந்த டிரஸ் போடப் போறோம். அதுல பழைய காலத்துக்கு பேனா இருக்கணும். ஒருவேளை அவங்க அதை மிஸ் பண்ணிட்டா நாம கொண்டு போவோம் என்று அவரே 3 விதமான பழைய கால பேனாக்களை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். அப்படி ஒரு சிறந்த நடிகர் அவர்.

எப்போதுமே அவருக்கு அந்த டெடிகேசன் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த மாதிரியான சின்ன விஷயங்களில் கூட அவர் எவ்வளவு உன்னிப்பாக கவனித்து செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்வு நல்ல ஒரு உதாரணம் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்