தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் சந்தானம். பல படங்களில் காமெடியில் அசத்திய சந்தானம் பிறகு ஹீரோவாக மாறி இப்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்து ஹீரோவாக நடித்து ஜெயித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சந்தானம் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா. இதில் லோக்கல் டிவி சேனல் நடத்துபவராக கார்த்தியும் அவரது நண்பராக சந்தானமும் நடித்திருந்தனர். இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சந்தானம் கூறியதாவது, முதல் நாள் ஷூட்டிங்குக்கு போகும்போதே சொல்லிடுவேன். இந்த படம் பிளாப் ஆயிடும். வேலைக்கு ஆகாது என்று. ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் அப்படித்தான். அதில் மெயின் சப்ஜெக்ட்டே அடி வாங்குகிறது.
ஹீரோ வந்து கரீனா சோப்ரான்னு ஒரு லேடியை காண்பிச்சு வில்லனை ஹீரோ ஏமாத்தறான். ஹீரோயினும் அவன் மேல சந்தேகப்படறா. வில்லன் சீனிவாசராவும் அவ மேல ஆசைப்படறான்னு சொல்லும் போது நான் சொன்னேன். அவ்வை சண்முகி மாதிரி இதுக்கு மேக்கப் பண்ணனும்.
ஒரு பொண்ணு மேல ஒருத்தர் ஆசைப்படறாங்க. ஆனா அவன் ஆம்பிளை. அவ்வை சண்முகி படம் ஜெயிச்சதுக்கு காரணம் என்ன மேக்கப். அதுக்காக டெடிகேசன் பண்ணினாங்க. எபோர்ட் பண்ணினாங்க. இங்க ஒரு பொண்ணை ஆம்பிளைங்க லவ் பண்றாங்க. ஆனா ஜனங்க அதை நம்பலே.
ஏன்னா இது நார்மல் மேட்டர். அதை தான் நான் சொன்னேன். டைரக்டர் ராஜேஷ் சார்கிட்டேயும் சொன்னேன். படத்தோட புரடக்சன்லேயும் சொன்னேன். அப்ப நான் சொன்னேன். இது ஒர்க் அவுட் ஆகாதுன்னு சொன்னேன். இது ஃபன்னுக்காக பண்ணலே, மெயின் கேரக்டராக பண்றோம். அதனால் இந்த படம் ஓடாதுன்னு முதல் நாளே எனக்கு தெரிஞ்சுடுச்சு என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.





