கடந்த 1998ம் ஆண்டில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் தினந்தோறும். இந்த படத்தில் முரளி சுவலட்சுமி இணைந்து நடித்திருந்தனர். நாகராஜ் என்பவர் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் சில காட்சிகளிலும் அவர் நடித்திருந்தார். மணிவண்ணன் ரேணுகா கிட்டி வடிவுக்கரசி மலேசியா வாசுதேவன் பாலாசிங் தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் பெரிய வெற்றியை பெற்ற போதிலும் இந்த படத்தின் இயக்குனர் நாகராஜ் அடுத்தடுத்த படங்களை இயக்கவில்லை. காரணம் அவரது குடிப்பழக்கம். எப்போதும் போதையில் காணப்படுவது அவரது வழக்கம். 21 ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவர் குடிக்காமல் இருந்தது இல்லை என்று அவரே ஒருமுறை கூறி இருக்கிறார்.
அதே போல் இயக்குனர் நாகராஜூக்கு ஒருமுறை விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவர் விஜயிடம் கதை சொல்லப் போகும் போதே மதுபோதையில் சென்றுள்ளார். அதை தெரிந்துக்கொண்ட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அவர் விஜய் படத்தை இயக்க வேண்டாம் என்று திருப்பி அனுப்பியதாகவும் ஒரு தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக மதுப்பழக்கத்தை விட்டு வெளியே வந்துவிட்ட இயக்குனர் நாகராஜ், குடிப்பழக்கத்தை கைவிட்ட 2 ஆண்டுகளில் உடல் ரீதியாக மனம் ரீதியாக பல பாதிப்புகளை சந்தித்துள்ளார். எனினும் கடந்த 9 ஆண்டுகளாக குடிப்பழக்கத்தை விட்டு வெளியே வந்த அவர். சமீபத்தில் விதார்த் நடித்த மருதம் என்ற படத்தில் வக்கீல் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு இப்போது ஆகாயம் என்ற படத்தை நாகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி தருகிறார். காஞ்சி மாடம் என்ற படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் ஆகாயம் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு 2 மாதங்கள் நடிப்பு பயிற்சி தந்து இந்த படத்தில் அவரை நாகராஜ் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார். ஆகாயம் படம் தினந்தோறும் இயக்குனர் நாகராஜூக்கு தமிழ் சினிமாவில் வெற்றிக்கரமான 2வது ரவுண்டாக அமையுமா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த அவர் இழந்த வாய்ப்புகளை எல்லாம் ஆகாயம் பெற்றுத் தருமா என்பதற்கு வரும் நாட்கள்தான் பதில் சொல்லும்.





