- Advertisement -
இப்போதெல்லாம் ஓரிரு படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்று விட்டாலே 4 அசிஸ்டெண்டுகளை வைத்துக் கொண்டு அலப்பரை செய்வது இன்றைய நடிகர்களின் வழக்கமாகி விட்டது. ஆனால் எம்ஜிஆர் நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருந்த போதும், தமிழக முதல்வரான பிறகும் எம்ஜிஆர் எளிமையானவராகவே இருந்தார். அதிகாலையில் இராமாவரம் தோட்டத்துக்கு தொலைபேசி மூலம் யாராவது தொடர்பு கொண்டால் நான் ராமச்சந்திரன் பேசுறேன் என்று எந்தவித பந்தாவும் இல்லாமல் பல நேரங்களில் அவரே போனை எடுத்து பேசுவார். முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கேட்டால் சுருக்கமாக இருந்தால் தொலைபேசியிலேயே பதில் சொல்வது அவரது வழக்கம். விரிவாக பேச வேண்டும் என்றால் நேரில் வாங்க என்று அவர்களை வீட்டுக்கு அழைத்து பேசி விடுவார்.





