தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளராகவும் உள்ளார். இவருக்கு பயில்வான் என பெயர் வைத்ததே புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். பல பழைய படங்களில் வில்லனாகவும், வில்லன் அடியாட்களில் ஒருவராகவும், பல படங்களில் காமெடி காட்சிகளில் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் போன்றவர்களுடன் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகர் சத்யராஜ் என்னிடம் அண்ணே அண்ணே என்று ஆரம்பத்தில் இருந்தே அன்பாக பழகக் கூடியவர். அவரை விட நான் வயதில் மூத்தவன். கவுண்டமணி சத்யராஜ் நடித்த பல படங்களில் அவர்களுடன் இணைந்து நான் நடித்திருக்கிறேன்.
அதுவும் இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய படங்களில் பெரும்பாலும் எனக்கு வாய்ப்பு கொடுப்பார். அந்த அடிப்படையில் நான் சத்யராஜூடன் நிறைய நடித்திருக்கிறேன். எனக்கு ஆரம்பத்தில் சத்யராஜ் மீது மரியாதை இருந்ததற்கு காரணம் அவர் எம்ஜிஆருடைய பக்தன். எம்ஜிஆர் ரசிகர்.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னால் முதல்வர் ஜெயலலிதாவை தனது மகன் சிபிராஜூடன் சென்று சத்யராஜ் சந்தித்தார். அது எனக்கு தெரியும். நான் அப்போது நமது எம்ஜிஆர் பத்திரிகையில் இருந்தேன். ஆரம்பத்தில் எம்ஜிஆர் விசுவாசியாகவும் பிறகு ஜெயலலிதாவின் அனுதாபியாகவும் இருந்தவர் தான் சத்யராஜ்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தன்னை நாத்திகவாதி என்று சத்யராஜ் அறிமுகப்படுத்திக் கொண்டார். அதுவரைக்கும் நாத்திகவாதி சத்யராஜை தெரியவே தெரியாது. அப்போதுதான் அவரை நான் பச்சோந்தி என்று நினைச்சுக்கிட்டேன்.
ஏனென்றால் நாத்திகவாதிகளை அதிகமாக தன்னோடு சேர்த்துக்கொள்ள மாட்டார் எம்ஜிஆர் என்பது எனக்கு தெரியும். எம்ஜிஆரிடம் போய் நீங்கள் பயன்படுத்திய ஏதாவது ஒன்றை கொடுங்கள் என்று சொல்லி அவரிடம் கர்லா கட்டையை பரிசாக வாங்கி வந்தவர் சத்யராஜ் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக அந்த நேர்காணலில் விமர்சித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





