- Advertisement -
Homeபொழுதுபோக்குவிழா மேடையில் இளம் நடிகைகளிடம் இப்படியா நடந்துக் கொள்வது? - மூத்த இயக்குனருக்கு எதிராக வலுக்கும்...

விழா மேடையில் இளம் நடிகைகளிடம் இப்படியா நடந்துக் கொள்வது? – மூத்த இயக்குனருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு – ரசிகர்கள் கண்டனம்!

- Advertisement -

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் அனில் ரவிபுடி. இவர் இயக்கிய மன சங்கர வர பிரசாத் காரு படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் வெங்கடேஷ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மிகப்பெரிய வசூலை இந்த படம் குவித்தது.

அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அனில் ரவிபுடி நடிகர் வெங்கடேஷ் டக்குப்பாட்டி மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் இணையும் புதிய திரைப்படம் ஒன்றை டைரக்ட் செய்ய உள்ளார். வணிக அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இது உருவாகிறது. இந்த படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்த புதிய படத்தின் தொடக்க விழா பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினருடன் தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படம் அடுத்த 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை விழாவில் கலந்துகொண்ட மூத்த இயக்குனர் ராகவேந்திர ராவ் தொடர்பான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அந்த காணொளியில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டியின் கைகளைப் பிடித்து ராகவேந்திர ராவ் இழுப்பது போன்ற காட்சிகளும் கிருத்தி ஷெட்டியின் இடுப்பை பிடித்து அமுக்கி இழுப்பது போன்ற காட்சிகளும் அதில் உள்ளன. இந்த காணொளியை பகிர்ந்து வரும் ரசிகர்கள் பலரும், இளம் நடிகைகளின் அனுமதியின்றி உடல் ரீதியாக இப்படி தொடுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று மூத்த இயக்குனர் ராகவேந்திர ராவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

வயதில் மூத்த ஒரு இயக்குனர் இப்படி மேடையில் தரக்குறைவாக நடந்து கொள்வதா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். அதில் நடிகைகள் சங்கோஜமாக நெளியும் நிலையிலும் அவர்களை வலுக்கட்டாயாக அவர் பிடித்து இழுத்து தொல்லை செய்வது அப்பட்டமாக தெரிகிறது. எனினும் இந்த விவகாரம் குறித்து இயக்குனர் ராகவேந்திர ராவ் அல்லது படக்குழுவினரோ எந்த விதமான விளக்கமும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் இந்த காணொளியை பலரும் பகிர்ந்து மூத்த இயக்குனர் ராகவேந்திர ராவை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்