- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினியை கலாய்த்த நடிகர் கவுண்டமணி, நடந்ததை அப்படியே சொன்ன சூப்பர் ஸ்டார்...

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரஜினியை கலாய்த்த நடிகர் கவுண்டமணி, நடந்ததை அப்படியே சொன்ன சூப்பர் ஸ்டார் – இது வேற லெவல் லொள்ளுதான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹீரோக்களை பங்கமாய் கலாய்க்கும் ஒரே நடிகர் கவுண்டமணி தான். கோவை குசும்பு லொள்ளு நக்கல் என்பதை எல்லாம் தனது படங்களில் மட்டுமின்றி நிஜத்திலும் கடைபிடிப்பவர் கவுண்டமணி. எப்படியாவது மற்றவர்களை கலாய்த்து விடுவார். ஆனால் அது மிகவும் ரசிக்கும்படியாக தான் இருக்கிறது.

அதுவும் ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்களையே கலாய்த்து விடும் பழக்கம் கவுண்டமணிக்கு உண்டு. அதனால் படத்தில் நடிக்கும் போது அவர் கலாய்த்து விடுவார் என்பதற்காகவே காட்சிகளில் வசனங்களில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்றவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். அப்படியும் சந்தடி சாக்கில் ஹீரோக்களை கலாய்ப்பது கவுண்டமணியின் வழக்கம்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, நானும் செந்திலும் வீரா படப்பிடிப்பில் இருந்தோம். படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது கவுண்டமணி செந்திலுக்கு போன் செய்துவிட்டார். டேய் எங்கடா இருக்கே என்று கேட்கிறார். அவருக்கு ஷூட்டிங் இல்லை என்றால் செந்திலுக்கு போன் செய்து விடுவார். எங்கேடா இருக்கே என்று கேட்கிறார்.

செந்தில் ஷூட்டிங்கில் இருந்தால் கூட அண்ணே வீட்டுல இருக்கேன் என்று சொல்லி விடுவார். ஷூட்டிங்கில் இருக்கிறேன் என்று சொன்னால் கவுண்டமணிக்கு தனக்கு வேலை இல்லையே என்று நினைப்பார் என்பதால் செந்தில் அப்படி சொல்லிவிடுவார்.

- Advertisement -

ஆனால் இந்த தடவை செந்தில் மாட்டிக்கிட்டார். ஏனென்றால் வீரா படப்பிடிப்பு கவுண்டமணி வீட்டுக்கு பக்கத்துல தான் நடந்துட்டு இருக்குது. இப்போ வீட்டுல இருக்கேன்னு செந்தில் பொய் சொல்ல முடியாது. அதனால் ஷூட்டிங்கில் இருக்கறேன் அண்ணேன்னு செந்தில் சொல்லிட்டார்.

அப்போ கவுண்டமணி யாருடா ஹீரோ அப்படீன்னு கேட்கறார். ரஜினிகாந்த் அண்ணே என்று செந்தில் சொல்ல, ரஜினிகாந்த் ஹீரோவா? ஏண்டா அவரே ஃபுல் காமெடியும் பண்ணிடுவார். நீ என்னடா பண்றே அங்கே? வாடா இங்கே என்று கூறியிருக்கிறார் என்று தன்னை பற்றி கவுண்டமணி நக்கலாக கலாய்த்ததை மேடையில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

- Advertisement -

சற்று முன்