கடந்த சில தினங்களாக சட்டசபையில் ஆளுநர் உரை அதற்கு பின் ஆளுநர் உரை மீதான கட்சிகள் விவாதம் நடந்த போது ஆளுங்கட்சி தவெக மீது எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குறிப்பாக முதல்வர் விஜய் வாய் திறந்து எதுவுமே பேச மறுக்கிறார் என்றும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்தன.
இந்த நிலையில் இன்று ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் விஜய், கடந்த கால திமுக ஆட்சி குறித்தும் அதில் நடந்த ஊழல்கள் குறித்தும் விமர்சித்து பேசினார். குறிப்பாக டாஸ்மாக் ஊழல் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். இது சட்டசபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய விஜய், குட்டி கதை ஒன்றை சொல்லி எங்கே அப்பாவை காணோம் என்று திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்தார். மேலும் ஸ்டாலின் கழுத்து கீழே கையை வீசிக் காட்டியது போல, விஜயும் தனது பேச்சின் முடிவில் அதே போல் கையை வீசிக் காட்டி ஆக்சன் செய்தது இணையத்தில் வைரலானது.
கடந்த சில நாட்களாக நடிகை திரிஷாவுடன் முதல்வர் விஜய் நட்பில் இல்லை என்றும் அதனால்தான் விஜயின் பிறந்த நாளான நேற்று திரிஷா விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லவில்லை என்றும் ஒரு தகவல் வேகமாக பரவியது. இன்று விஜயை திரிஷா அன்பாலோ செய்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வைரலானது. இது விஜய் ரசிகர்களுக்கு நிம்மதியை தந்தது.
ஏனெனில் விஜய் திரிஷா நட்பு தேவையில்லாத விஷயமாக உள்ளது. குறிப்பாக முதல்வர் விஜய் மீது விமர்சனங்கள் வைக்க இது காரணமாகிறது. திரிஷாவால் விஜய்க்கு தேவையின்றி களங்கம் ஏற்படுகிறது என்று அவரது ரசிகர்களே புலம்பி வந்தனர். இந்த நிலையில் விஜயை விட்டு திரிஷா விலகினால்தான் விஜய் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் அவர்கள் கூறி வந்தனர்.
ஆனால் திடீரென இன்று மாலை நடிகை திரிஷா, முதல்வர் விஜயுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இரவு 12 மணிக்கு அந்த பிறந்த நாள் நிகழ்வு நடந்ததையும் குறிப்பிட்டுள்ளார். ஆக முதல்வர் விஜயுடன் இன்னும் நான் அதே நெருக்கமான நட்பில் இருக்கிறேன் என்பதை திரிஷா உறுதிபடுத்திய நிலையில், இந்த நட்பு முறியாது. அதே நேரத்தில் எதிர்கட்சிகளுக்கு இது விமர்சிக்க ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





