கடந்த 1990களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அவர் பல வெற்றி படங்களில் நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குறிப்பாக பஞ்சதந்திரம் பம்மல் கே சம்பந்தம் பிரியமானவளே துள்ளாத மனமும் துள்ளும் வாலி ஏழுமலை நட்புக்காக ரமணா உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் அவர் நடித்திருந்தார். மேலும் கோவில்பட்டி வீரலட்சுமி என்ற படத்தில் கதையின் நாயகியாகவும் சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான நடிகைகள் திருமணத்துக்கு பிறகு வெளிநாடுகளில் குடும்பத்துடன் செட்டிலாகி விடும் சூழலில் நடிகை சிம்ரன் மட்டும் இன்னும் சென்னையில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். கடந்த 1997ம் ஆண்டில் வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் சிம்ரன். 30 ஆண்டுகளுக்குப் பிறகும் தர்மன் படத்தில் சிம்ரன் ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடிகை சிம்ரன் நடிகர் சசிக்குமார் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தனது திருமணத்துக்கு பிறகும் பிள்ளைகளுக்கு தாயான பிறகும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போதும் அவர் நடுத்தர வயதுக்குரிய தோற்றத்தில் சீமராஜா அந்தகன் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் தர்மன். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாகநடிகை சிம்ரன் நடிக்க கமிட் ஆகி உள்ளார். ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினியுடன் சிம்ரன் இணைந்து நடித்திருந்தாலும் தர்மன் படத்தில் தான் அவர் ஜோடியாக நடிக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சிம்ரன் கூறியதாவது, சில கனவுகள் நனைவாக சரியான நேரம் அமைய வேண்டும். ரஜினிகாந்துடன் இணைந்து முக்கியமான கேரக்டரில் நடிப்பது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று. அது பேட்ட படத்தில் நிறைவேறியது. என்னுடையது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மறக்க முடியாத அனுபவமாக அது இருந்தது.
ஆனால் இன்று தர்மன் படத்தில் முக்கியத்துவமும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய ரஜினிகாந்த் கமல்ஹாசன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி என்று சிம்ரன் கூறியிருக்கிறார்.





