தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகை பிரியாமணி. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுகங்களில் ஒருவர் என்று பலருக்கும் தெரியாது. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் பிரியாமணி.
ஆனால் நடிகை பிரியாமணிக்கு மிகப்பெரிய அடையாளத்தை அங்கீகாரத்தை கொடுத்தது இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படம்தான். இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக 2007ம் ஆண்டில் சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரியாமணி தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நினைத்தாலே இனிக்கும் மலைக்கோட்டை அது ஒரு கனாக்காலம் சாருலதா தோட்டா ஆறுமுகம் இராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் படத்திலும் நடிகை பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் என்றும் தகவல் பரவி வருகிறது. வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிரியாமணி ஜனநாயகன் படம் குறித்து கூறியதாவது, ஜனநாயகன் படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகுமா? இல்லை அடுத்த மாதம் ரிலீஸ் ஆகுமா? என்பதை விரைவில் உறுதி செய்து அறிவிப்போம். முதலமைச்சர் பொறுப்புக்காகவே விஜய் பிறந்தவர் என்றுதான் நான் நினைக்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சராக அவர் சிறப்பாக செயல்படுகிறார். பிறவியிலேயே ஒரு சிறந்த தலைவர் அவர் என்று நடிகை பிரியாமணி முதல்வர் விஜய் குறித்து பேசியிருக்கிறார். ஜனநாயகன் படம் 5 மாதங்களுக்கு பிறகு திரைக்கு வந்தாலும் அதை கோலாகலமாக கொண்டாட தளபதி ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.





