- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வைரமுத்துவுக்கு அதை அனுப்பிய கே பாக்யராஜ் - மனைவி...

மறைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வைரமுத்துவுக்கு அதை அனுப்பிய கே பாக்யராஜ் – மனைவி பூர்ணிமா மகன் சாந்தனுவிடம் நேரில் ஒப்படைத்த கவிஞர் நெகிழ்ச்சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக சிறந்த நடிகராக திரைக்கதை எழுதுவதில் மிகச் சிறந்த ஆளுமையாக கொண்டாடப்பட்டவர் கே பாக்யராஜ். கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி அவர் தனது 73 வது வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் கே பாக்யராஜ் தனது மறைவுக்கு முன்பு தன்னுடைய சுயசரிதையை அவரே எழுதி இருக்கிறார். படிச்சா புடிச்சிரலாம் என்று அந்த சுயசரிதை நூலுக்கு தலைப்பும் வைத்திருக்கிறார். மேலும் தனது சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதி தருமாறு கவிஞர் வைரமுத்துவிடம் கே பாக்யராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நூலை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

- Advertisement -

ஆனால் கவிஞர் வைரமுத்து அந்த சுயசரிதை நூலுக்கு முன்னுரை எழுதி முடிப்பதற்குள் கே பாக்யராஜ் காலமாகிவிட்டார் என்பது துயரமானது.இந்த நிலையில் மறைந்த இயக்குனர் கே பாக்யராஜின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர் எழுதிய சுயசரிதைக்கான முன்னுரையை கவிஞர் வைரமுத்து எழுதி முடித்துள்ளார்.

அதை அவரது மனைவி பூர்ணிமாவிடம் நேரில் சென்று வைரமுத்து வழங்கி இருக்கிறார். அப்போது பாக்யராஜின் மகன் சாந்தனுவும் உடன் இருந்திருக்கிறார். அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த ஜூன் 17ம் தேதி படிச்சா புடிச்சிரலாம் என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை எனக்கு அனுப்பி வைத்து முன்னுரை எழுதிக் கொடுங்கள் என்று பாசத்தோடு கேட்டார் பாக்யராஜ்.

- Advertisement -

கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்றேன். சரி என்றார். ஆனால் 27ம் தேதி அன்று அவர் மறைவுற்றார் என்ற செய்தி என்னை நிலைகுலைய வைத்தது. அதன் பிறகு நூலை படிக்க படிக்க அவர் பட்ட துயரங்களும் ரணங்களும் அவமானங்களும் வறுமையும் என்னை வாட்டி எடுத்தன. உணர்ச்சியுள்ள ஒரு முன்னுரை எழுதி முடித்தேன். பிறிதொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால் முன்னுரையை மின்னஞ்சலில் அனுப்பி இருப்பேன்.

ஆனால் இந்த சூழ்நிலையில் நேரில் சென்று அவர் மனைவியிடம் ஒப்படைப்பதே மரியாதை என்று நினைத்தேன். நேற்று மாலை அவர் இல்லம் சென்று திருமதி பூர்ணிமாவிடம் முன்னுரையை வழங்கினேன். தம்பி சாந்தனு உடன் இருந்தார். எவர் வெளியிட்டாலும் உடனே வெளியிடுங்கள். உயிர்த் துடிப்புள்ள புத்தகம் இது என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். தனது சுயசரிதைக்கு வைரமுத்துவிடம் முன்னுரை கேட்ட 10 நாட்களில் அவர் மறைந்தது மிகவும் துரதிஷ்டமானது என்று ரசிகர்கள் வருந்துகின்றனர்.

- Advertisement -

சற்று முன்