இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திடீரென காலமானார். அவரது மறைவின் சோகம் இன்னும் ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை. ஒரு ஆளுமை மிக்க சிறந்த திரைக்கலைஞராக இருந்த அவர் 73 வயதில் இயற்கை எய்தியதை ரசிகர்களால் ஏற்கவே முடியவில்லை. அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்த 17வது நாளில் சீடர் கே பாக்யராஜூம் மறைந்து விட்டார்.
இயக்குனர் கே பாக்யராஜ் மனைவி நடிகை பூர்ணிமா. இந்த நட்சத்திர தம்பதிக்கு சாந்தணு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். சரண்யாவின் மகன் அதாவது பேரன் மீது தாத்தா பாக்யராஜூக்கு பாசம் மிக அதிகம். எப்போதும் தன் பேரனிடம் அதிக அன்பும் பாசமும் காட்டினார். அதே போல் தாத்தா மீது பேரனுக்கும் அதிக பாசம் இருந்தது.
சாந்தனு, விஜே கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தியை கிகி என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தனு கிகி திருமணம் நடந்தது. ஆனால் இதுவரை அவர்களுக்கு குழந்தை இல்லை. இது பாக்யராஜ் – பூர்ணிமாவுக்கு அதிக கவலையை மன வருத்தத்தை கொடுத்தது.
அதே போல் இயக்குனராக கே பாக்யராஜ் அறிமுகப்படுத்திய பல நடிகர் நடிகைகள் நட்சத்திரமாக இன்றும் ஜொலிக்கின்றனர். ஆனால் அவரது மகன் சாந்தனு இன்னும் நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் ஜெயிக்கவில்லை. தனக்கு மகன் வழி பேரன் அல்லது பேத்தி இன்னும் பிறக்கலையே என்கிற கவலையும் தன்னுடைய மகன் சினிமாவில் சாதிக்கலையே என்கிற ஏமாற்றமும் கே பாக்யராஜிடம் எப்போதுமே இருந்துள்ளது.
இந்நிலையில் சாந்தனுவின் மனைவி கிகி இப்போது கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, கே பாக்யராஜின் மருமகள் கிகி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இது இப்போதுதான் அந்த குடும்பத்துக்கே தெரிய வந்திருக்கிறது.
இந்த நல்ல தகவலை தெரிந்துக்கொள்ளாமலேயே பாக்யராஜ் மறைந்து விட்டார். விரைவில் அந்த வீட்டில் மீண்டும் பாக்யராஜே மகனாக பிறப்பார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். உண்மையில் கே பாக்யராஜ் குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய சந்தோஷம் என்றால் அதை முன்னிலை வகித்து கொண்டாட வேண்டிய ஒருவரை அந்த குடும்பம் இப்போது இழந்து நிற்பதுதான் காலத்தின் கொடுமையாக உள்ளது.





