- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ இல்லாமல் லொக்கேஷன் பார்க்க போன ஒரே டைரக்டர் அவர்தான், ஹீரோவை நம்பி அவர் படம்...

ஹீரோ இல்லாமல் லொக்கேஷன் பார்க்க போன ஒரே டைரக்டர் அவர்தான், ஹீரோவை நம்பி அவர் படம் எடுக்கலே – நடிகர் இளவரசு தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்தவர் இளவரசு. முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சியில் போட்டோஃகிராபராக நடித்திருப்பார். பிறகு அவர் சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் சில காட்சிகளில் நடித்தார். அதேபோல் பாஞ்சாலங்குறிச்சி போன்ற சில படங்களில் இளவரசு பின்னணி குரல் கலைஞராகவும் வசனங்கள் பேசியிருக்கிறார்

தொடர்ந்து பல படங்களில் சிறுவேடங்களில் நடித்த இளவரசு பிறகு சிறந்த குணச்சித்திர நடிகராக தன்னை வெளிப்படுத்தினார். அதன்பிறகு பல படங்களில் அப்பா கேரக்டர்களில் இளவரசுவின் நேர்த்தியான நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதே நேரத்தில் காமெடி கேரக்டரிலும் அவர் பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நடிகர் வடிவேலுவுடன் படம் முழுவதும் இளவரசு லகுட பாண்டி கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி நல்ல நடிகராக இளவரசு ரசிகர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் இளவரசு கூறியதாவது, ஒரு சாதாரணமான மனிதன் நடிகன் ஆகலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம். இளவரசு நடிகன் ஆனதே ஒரு உதாரணம். ஹீரோவே இல்லாமல் படத்துக்கு லொக்கேஷன் பார்க்க போன ஒரே இயக்குனர் யார் என்றால் அது பாரதிராஜா தான். அவர் இயக்கிய மண் வாசனை படத்துக்கு ஹீரோ கிடையாது.

- Advertisement -

யூனிட் எல்லாம் தேனி போயாச்சு. சித்ரா லட்சுமணன் தான் புரடியூசர். வாய்யா பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டு அவரை கூட்டீட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்னாடி, மண்டையில் வீரண்ணா கேரக்டரை வெச்சிக்கிட்டு அங்கு வந்து போற ஆட்களை பாரதிராஜா பார்த்துக்கிட்டே இருந்திருக்கார். அப்புறம் அவனை கூப்பிடு என்று பாண்டியனை செலக்ட் செய்தார்.

இந்த கான்பிடண்ட் எல்லாம் இயக்குனர்களுக்கு பாரதிராஜாவுக்கு பின்னால தான் வந்தது. ஹீரோவே இல்லை. ஹீரோவை நம்பி படம் எடுக்கறது ஒரு ரகம். ஹீரோவை போற வழியில் நான் புடிச்சிட்டு போறேன் என்று அந்த நம்பிக்கையில் திறமையில் இருக்கிறது இன்னொரு ரகம் என்று நடிகர் இளவரசு அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்